தியேட்டரில் 25 நாட்களைக் கடந்தது டிசி படம்… ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட படக்குழு
DC movie completes 25 days | இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் வெளியான படம் டிசி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 25 நாட்கள் நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து இயக்குநராக உச்சத்தி இருக்கும் இவர் தற்போது தமிழ் சினிமாவில் நாயகனாகவும் அறிமுகம் ஆகி நடித்து வருகிறார். அதன்படி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி உள்ள படம் டிசி. இந்தப் படத்தினை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து துப்பாக்கியும் வன்முறையும் அதிக அளவில் இருக்கும் அதே மாதிரிதான் இந்த டிசி படமும் மிகவும் ஆக்ஷன் வன்முறை நிறைந்த படமாக திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
அதன்படி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து திரையரங்குகளில் வரவேற்பைப் பெறும் இந்த டிசி படம் வசூலில் 100 கோடி ரூபாயை கடந்து சென்று கொண்டு இருக்கின்றது. இந்த நிலையில் படம் அடுத்ததாக வருகின்ற 04-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தனது தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பாக தயாரித்து இருந்தார். இந்த நிலையில் டிசி படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 25 நாட்களைக் கடந்துள்ளது. இதனைப் படங்களு கொண்டாடும் விதமாக தங்கள்து எக்ஸ் தள பக்கத்தில் ஒரு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… 2 படங்களில் விஜய் சாருடன் பணியாற்றும் வாய்ப்பு தவறியது – ஜிவி பிரகாஷ் குமார் ஓபன் டாக்
டிசி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
25 Days of an Explosive Theatrical Experience for the Mega Blockbuster #DC ♥️🌹🔥@Dir_Lokesh @ArunMatheswaran @anirudhofficial #WamiqaGabbi @isanjkayy @mukesh_DOP @editor_prasanna @skannanartdir @PC_stunts @kabilanchelliah @kuchirayar73 @RIAZtheboss pic.twitter.com/qrrUYHuh8a
— Sun Pictures (@sunpictures) August 31, 2026
Also Read… குக் வித் கோமாளி சீசன் 7 வின்னர் & ரன்னர் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்



