துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்தின் கதை இதுதானா? வைரலாகும் தகவல்
I Am Game movie synopsis | நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஐ அம் கேம். இந்தப் படத்தின் கதை சுருக்கம் என்ன என்பது குறித்து தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
மலையாள சினிமாவில் கடந்த வாரம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடிகர்கள் நிவின் பாலி மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் பெத்தலேக குடும்ப யூனிட் மற்றும் கலிஃபா ஆகியப் படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இந்த இரண்டு படங்களுடன் ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இருந்த படம் தான் நடிகர் துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படம். இந்தப் படத்தினை கடந்த 21-ம் தேதி ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் முடிவடைய தாமதம் ஆனதால் படத்தை வெளியிடவில்லை. தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
அதன்படி இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடித்து உள்ளார். மேலும் இந்தப் படத்தினை இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படம் வருகின்ற செப்டம் மாதம் 03-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.




துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்தின் கதை இதுதானா?
இந்த நிலையில் இந்த ஐ அம் கேம் படத்தின் கதை சுருக்கம் என்ன என்று தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி தன் உயிரை விட அதிர்ஷ்டத்தை அதிகம் நம்பும் ஒரு துணிச்சலான சூதாடி, தனது உலகையே தலைகீழாக மாற்றும் விசித்திரமான மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளின் தொடரில் சிக்கிக்கொள்கிறான். அதைத் தொடர்ந்து வருவது வேடிக்கை, ஆச்சரியங்கள், அதிரடி மற்றும் மறக்க முடியாத தருணங்கள் நிறைந்த ஒரு விறுவிறுப்பான பயணமாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#ImGame 🎲
Synopsis:
A fearless gambler who trusts luck more than life finds himself caught in a series of crazy and unexpected events that turn his world upside down. What follows is a thrilling ride filled with fun, surprises, action, and unforgettable moments.Starring:… pic.twitter.com/h0p4joDh1T
— Movies Singapore (@MoviesSingapore) August 28, 2026
Also Read… தர்மன் படத்திற்கு பிறகு நிச்சயமாக எஸ்டிஆர் 51 படம் தான் – உறுதி செய்த இயக்குநர்