Gold : இரண்டாவது நாளாக சரிந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?
Gold Price Reduced For Second Day In Chennai | தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று 2வது நாளாக தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, செப்டம்பர் 07 : தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 07, 2026) இரண்டாவது நாளாக சரிவை சந்தித்துள்ளது. அதாவது, தங்கம் விலை ரூ.480 குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் (Silver Price) மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் விலை
2026 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை நிலையற்ற தன்மையை கொண்டுள்ளது. உதாரணமாக ஜனவரி மாதத்தில் ரூ.15,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிராம் தங்கம், அதன்பிறகு சரிவையும், உயர்வையும் சந்தித்து ஏற்ற, இறக்கங்களின் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடைசியாக ஆகஸ்ட் மாத இறுதியில் உயர்வை சந்தித்த தங்கம் ஒரு கிராம் ரூ.15,000-த்தை தாண்டி விற்பனையானது. ஆனால், அதன்பிறகு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருவதன் காரணமாக ஒரு கிராம் ரூ.14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : Fake Loan Scam.. பாதுகாப்பாக இருப்பது எப்படி.. இந்த விஷயங்களை நோட் பண்ணுங்க!
கடந்த 10 நாட்களுக்கான தங்கம் விலை நிலவரம்
| தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
| 07 செப்டம்பர் 2026 | ரூ.14,130 | ரூ.1,13,040 |
| 06 செப்டம்பர் 2026 | ரூ.14,190 | ரூ.1,13,520 |
| 05 செப்டம்பர் 2026 | ரூ.14,190 | ரூ.1,13,520 |
| 04 செப்டம்பர் 2026 | ரூ.14,360 | ரூ.1,14,880 |
| 03 செப்டம்பர் 2026 | ரூ.14,240 | ரூ.1,13,920 |
| 02 செப்டம்பர் 2026 | ரூ.13,950 | ரூ.1,11,600 |
| 01 செப்டம்பர் 2026 | ரூ.14,175 | ரூ.1,13,400 |
| 31 ஆகஸ்ட் 2026 | ரூ.14,370 | ரூ.1,14,960 |
| 30 ஆகஸ்ட் 2026 | ரூ.14,505 | ரூ.1,16,040 |
| 29 ஆகஸ்ட் 2026 | ரூ.14,505 | ரூ.1,16,040 |
இதையும் படிங்க : ரேஷன் கார்டு விண்ணப்பங்களில் புதிய மாற்றம்.. கவலையே வேண்டாம்.. இனி அலையத் தேவையில்லை!!
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
இவ்வாறு மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை தங்கம் விலை சந்தித்து வரும் நிலையில், இன்று (செப்டம்பர் 07, 2026) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.14,130-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,415-க்கும், ஒரு சவரன் ரூ.1,23,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


