பழைய லேப்டாப் போதும்! 16GB RAM, 1TB சேமிப்பு வழங்கும் ஜியோபிசி
பழைய ஹார்டுவேர், குறைந்த சேமிப்பகம் அல்லது பழைய இயங்குதளம் காரணமாக கணினியின் வேகம் குறைந்தவர்களுக்காக ஜியோபிசி வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளவுட்டிலேயே கணினி செயல்பாடுகளின் பெரும்பகுதி மேற்கொள்ளப்படுவதால், 8 ஆண்டுகள் பழைய கணினியிலும் தற்போதைய AI செயலிகள் மற்றும் அதிக சேமிப்பகம் தேவைப்படும் பணிகளை மேற்கொள்ள முடியும் என ஜியோ தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 5, 2026: பழைய லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் வேகம் குறைந்துவிட்டதால் புதிய கணினி வாங்க நினைப்பவர்கள், இனி அவசரப்பட வேண்டியதில்லை. ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபிசி (JioPC) சேவை மூலம், ஏற்கனவே உள்ள கணினியையே கிளவுட் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதிக திறன் கொண்டதாக மாற்றிக்கொள்ள முடியும். இதன் மூலம் புதிய ஹார்டுவேர் வாங்காமலேயே, பயனர்கள் தங்களது தற்போதைய லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பில் 16GB வரை RAM மற்றும் 1TB வரை கிளவுட் சேமிப்பகத்தை பயன்படுத்த முடியும்.
இதுவரை ஜியோபிசி சேவை ஜியோஹோம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து இணையப் பயனர்களும் பயன்படுத்தும் வகையில் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. புதிய திட்டங்களில் 8GB RAM, 500GB கிளவுட் சேமிப்பகம் கொண்ட அடிப்படை திட்டமும், 16GB RAM, 1TB கிளவுட் சேமிப்பகம் கொண்ட ஜியோபிசி அல்ட்ரா திட்டமும் இடம்பெற்றுள்ளன.
ரூ.1,000 முதல் திட்டங்கள்:
ஜியோபிசி திட்டங்களின் ஆரம்ப விலை ரூ.1,000 ஆகும். 8GB RAM மற்றும் 500GB சேமிப்பகத்துடன் 2 மாத திட்டம் ரூ.1,000-க்கும், 16GB RAM மற்றும் 1TB சேமிப்பகத்துடன் கூடிய அல்ட்ரா திட்டம் ரூ.1,200-க்கும் வழங்கப்படுகிறது.
5 மாத அடிப்படை திட்டம் ரூ.2,000-க்கும், அல்ட்ரா திட்டம் ரூ.2,500-க்கும் கிடைக்கிறது. 10+2 மாதங்கள் எனப்படும் 12 மாத திட்டத்தின் விலை ரூ.4,000 ஆகவும், அல்ட்ரா திட்டத்தின் விலை ரூ.5,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
8 ஆண்டுகள் பழைய கணினியிலும் AI செயலிகள்!
பழைய ஹார்டுவேர், குறைந்த சேமிப்பகம் அல்லது பழைய இயங்குதளம் காரணமாக கணினியின் வேகம் குறைந்தவர்களுக்காக ஜியோபிசி வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளவுட்டிலேயே கணினி செயல்பாடுகளின் பெரும்பகுதி மேற்கொள்ளப்படுவதால், 8 ஆண்டுகள் பழைய கணினியிலும் தற்போதைய AI செயலிகள் மற்றும் அதிக சேமிப்பகம் தேவைப்படும் பணிகளை மேற்கொள்ள முடியும் என ஜியோ தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
மேலும், ஜியோபிசியை எந்தவொரு இணைய இணைப்பிலும் பயன்படுத்தலாம். ஜியோஹோம் இணைப்பு கட்டாயமில்லை. பிராட்பேண்ட், 4G அல்லது 5G இணைய இணைப்பு மூலம் இந்த சேவையைப் பயன்படுத்த முடியும். இதனை 5 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் செயல்படுத்தலாம் என்றும், புதிய ஹார்டுவேர் நிறுவல் அல்லது டேட்டா மாற்றம் தேவையில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.