AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price : ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்த தங்கம் விலை.. இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் விலை உயர்வு!

Gold Price Increased and Silver Price Remain Same In Chennai | சென்னையில் தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இரண்டு நாட்கள் தொடர் சரிவுக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

Gold Price : ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்த தங்கம் விலை.. இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் விலை உயர்வு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Sep 2026 10:38 AM IST

சென்னை, செப்டம்பர் 08 : சென்னையில் நாளுக்கு நாள் தங்கம் விலை (Gold Price) மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்கள் தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம், இன்று (செப்டம்பர் 08, 2026) அதிரடி விலை உயர்வை சந்தித்துள்ளது. அதாவது, தங்கம் கிராமுக்கு ரூ.140 உயர்வை சந்தித்துள்ளது. ஆனால், வெள்ளி விலையில் (Silver Price) எத்தகைய மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் விலை

பண வீக்கம், புவிசார் பதற்றம், சந்தை நிலவரம் ஆகியவை தங்கத்தின் விலையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன. குறிப்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தொடர்ந்து போர் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவது, ஹோர்முஸ் விவகாரம், மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டாம் என திட்டமிட்டுள்ளது ஆகியவை அனைத்தும், தங்கத்தின் விலையில் தொடர் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க : மூத்த குடிமக்கள் FD திட்டம்.. சிறந்த வட்டி வழங்கும் இரண்டு வங்கிகள்.. முழு விவரம் இதோ!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,270-க்கும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,567-க்கும், ஒரு சவரன் ரூ.1,24,536-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எத்தகைய மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us