பிளஸ் 2 மாணவி கூட்டு வன்கொடுமை… ஒருவருக்கு மரண தண்டனை.. நெல்லை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Nellai POCSO Court Death Sentence : திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய் த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு மரண தண்டனையும், இருவருக்கு சிறை தண்டனையும் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது .
திருநெல்வேலியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரது வீட்டின் அருகே உள்ள தேவாலயத்தில் கடந்த 2022- ஆம் ஆண்டு பெயிண்டிங் வேலைக்காக தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தை சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் வந்திருந்தார். அப்போது, இவருக்கும், இந்த சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் செல்போன் எண்களை பறிமாறி பேசி வந்துள்ளனர். இதில், அந்த சிறுமியை காதலிப்பதாக முனீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதை அந்த சிறுமி நம்பி பேசிவந்துள்ளார். இந்த நிலையில், அந்த சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி முனீஸ்வரன் பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள காட்டு பகுதிக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார். அங்கு முன்னதாக தனது நண்பர்களான கொக்கிரகுளம், கீழ வீரராகவபுரத்தை சேர்ந்த சின்ன குட்டி, முருகேசன் ஆகியோர் முனீஸ்வரன் வரவழைத்துள்ளார்.
சிறுமி வன்கொடுமை – குற்றவாளிக்கு தூக்கு தண்டனை
தொடர்ந்து அங்கு வைத்து அந்த சிறுமியை 3 பேரும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், அந்த சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு 3 பேரும் தப்பி சென்றுவிட்டனர். இந்தச் சம்பம் தொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், சின்னக்குட்டிக்கு மரண தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், சிறுமியை கடத்தி சென்றதற்காக முனீஸ்வரனுக்கு 3 ஆண்டுகள் உள்பட 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், முருகேசனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்துள்ளார்.
மேலும் படிக்க: சென்னை தவெக பிரமுகர் கொலை சம்பவம்.. கெத்தாக வலம் வந்ததால் கொன்றேன்.. கைதான மாணவர் பகீர் வாக்குமூலம்!




அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை
முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மூவரையும் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இது தொடர்பான வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 4- ஆம் தேதி 3 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்து இருந்தார். அவர்களுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று செவ்வாய்க்கிழமை ( செப்டம்பர் 8- ஆம் தேதி) வழங்கப்படுவதாக நீதிபதி தெரிவித்திருந்தார்.
நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு
இதற்காக, சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 இளைஞர்களும் நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அதன்படி, அவர்களுக்கான தண்டனை விவரத்தை நீதிபதி அறிவித்தார். இதில், ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் நீதிமன்ற வளாகத்திலும், நெல்லை மாவட்டத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: கேரள கொடூர விபத்து.. தமிழக மாணவர்கள் மது போதையில் கார் ஓட்டினார்களா? தடயவியல் மருத்துவர் பகீர் தகவல்!