AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : மீண்டும் 4,000 டாலர்களை கடந்த தங்கம்.. கடும் விலை உயர்வை எதிர்க்கொள்ள போகும் இந்தியா?

Gold Price Crossed 4000 Dollars | தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஜூன் மாதத்தில் தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம், தற்போது அதிரடி விலை உயர்வை சந்தித்துள்ளது. தற்போதைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : மீண்டும் 4,000 டாலர்களை கடந்த தங்கம்.. கடும் விலை உயர்வை எதிர்க்கொள்ள போகும் இந்தியா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 22 Jul 2026 14:47 PM IST

ஜூன் மாதம் முதல் தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம் கடந்த இரண்டு நாட்களாக தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. இன்று (ஜூலை 22, 2026) தங்கம் விலை (Gold Price) அதிரடி உயர்வை சந்தித்துள்ள நிலையில், வெள்ளியும் உயர்வை சந்தித்துள்ளது. இத்தனை நாட்கள் தொடர் சரிவை சந்தித்து வந்ததன் காரணமாக தங்கம் விலை சரிந்து வந்த நிலையில், தற்போது உலக அளவில் மீண்டும் தங்கம் விலை சுமார் 4,000 அமெரிக்க டாலர்களை கடந்து விற்பனையாகிறது.

இந்த விலை உயர்வு சற்று அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Silver Price) நிலவரம் என்ன, இனி வரும் நாட்களில் தங்கம் விலையில் எத்தகைய மாற்றம் ஏற்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மீண்டும் 4,000 அமெரிக்கா டாலர்களை தாண்டிய தங்கம் விலை

ஜூன் மாதம் முதலே தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. ஜூலை மாதத்தில் ஒருசில நாட்களில் பெரிய அளவில் இல்லாமல் மிக குறைந்த அளவே தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வை சந்தித்தது. இந்த நிலையில் தான், இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.1,680 மற்றும் வெள்ளி விலை ரூ.5,000 உயர்வையும் சந்தித்துள்ளது. அதாவது, உலக சந்தையில் தங்கம் விலை கடும் உயர்வை சந்தித்து மீண்டும் ரூ.4,000 அமெரிக்க டாலர்களை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : நெட்வொர்க் இல்லாத பகுதிகளிலும் UPI.. புதிய அம்சத்தை கொண்டு வர திட்டம்!

அதாவது உலக சந்தையில் தங்கம் விலை ஒரே நாளில் 108 டாலர்கள் உயர்வை சந்தித்து 4,120 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இன்று ஒரு நாளில் மட்டும் தங்கம் விலை 2.67 சதவீதம் உயர்வை சந்தித்துள்ளது. இதேபோல ஒரு அவுன்ஸ் வெள்ளி இன்று ஒரே நாளில் 5 சதவீதம் உயர்வை சந்தித்து 59 டாலர்களுக்கு வர்த்தகமாகி வருகிறது.

தங்கம் விலை திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் மோதல் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக உலக முதலீட்டாளர்கள் ஆபத்தான முதலீடுகளில் இருந்து விலகி பாதுகாப்பான முதலீடான தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இதுவே தங்கத்தின் திடீர் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் நீடிக்கும் பட்சத்தில் தங்கம் விலை மேலும் உயர்வை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us