“நெஞ்சில் குடியிருக்கும் தளபதிக்கு” வீட்டு பூஜை அறையில் சிலை.. தினமும் கற்பூரம் காட்டி உருகும் தவெக நிர்வாகி.. எங்கு தெரியுமா..!
CM Vijay Statue At Trichy Home: திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி சுகுமார் என்பவர் தனது வீட்டு பூஜை அறையில் கட்சியின் தலைவரும், முதல் அமைச்சருமான ஜோசப் விஜய் உருவ பொம்மையை வைத்து கற்பூரம் காண்பித்து வழிபாடு மேற்கொண்டு வருகிறார்.
தமிழக அரசியல் களத்துக்கு புதிய வரவான தமிழக வெற்றி கழகம் சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு தேர்தல் பணி செய்து தேர்தலில் வெற்றி பெற்றது. அதன்படி, ஆட்சியும் அமைத்து, அந்த கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் தமிழகத்தின் முதல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்த ஜோசப் விஜய் தனது பெயரில் இருந்த மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றி கழக கட்சியாக மாற்றி இந்த இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர், அந்த வெற்றியை கொண்டாடும் வகையில், திருச்சியை சேர்ந்த ஒருவர் தனது வீட்டில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யின் உருவ பொம்மையை வைத்து தினமும் வழிபாடு மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
வீட்டு பூஜை அறையில் முதல்வர் விஜய் உருவ பொம்மை
திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சுகுமார் என்ற சண்முகம். இவர், தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகியாக இருந்து வருகிறார். விஜய் மீது தீராத அன்பும், கட்சியில் உழைக்க வேண்டும் என்ற விருப்பமும் இருப்பதால் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்து முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர், அதனை கொண்டாடும் விதமாக தனது வீட்டின் பூஜை அறையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முதல் அமைச்சருமான ஜோசப் விஜயின் ஒருவர் சிலையை வைத்து தினமும் கற்பூரம் காண்பித்து வழிபாடு செய்து வருகிறார்.




மேலும் படிக்க: பரந்தூர் விமான நிலையம்… முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்க திட்டம்.. என்ன முடிவெடுக்கப் போகிறார் விஜய்!
தினமும் விஜய் உருவ பொம்மைக்கு கற்பூர ஆரத்தி
இது தொடர்பாக தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோவில், முதல்வர் விஜய்யின் உருவ பொம்மைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி சுகுமார் என்ற சண்முகம் கற்பூரம் காண்பித்து, திருநீரை தனது நெற்றியில் பூசுவது போன்ற காட்சிகள் அதில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தீவிரமாக பரவி வருகிறது.
విజయ్ విగ్రహానికి టీవీకే కార్యకర్త పూజలు.. వీడియో వైరల్
తమిళనాడు ముఖ్యమంత్రి, టీవీకే అధినేత విజయ్ విగ్రహానికి ఓ అభిమాని ఇంట్లో పూజలు చేస్తున్న వీడియో సోషల్ మీడియాలో వైరల్గా మారింది. తిరుచ్చికి చెందిన సుకుమార్ షణ్ముగం అనే పార్టీ కార్యకర్త తన పూజా మందిరంలో విజయ్ బొమ్మ… pic.twitter.com/DPaD3XaXtf
— Anitha Reddy (@Anithareddyatp) June 3, 2026
தமிழகத்தில் முன்னனி நடிகர்களுக்கு சிலை – கோயில் அமைப்பு
இதே போல, தமிழகத்தில் நடிகர் ரஜினி காந்த்துக்கு மதுரை மாவட்டம், திருமங்கலத்தில், அவரது தீவிர ரசிகரான கார்த்திக் என்பவர் கோவில் கட்டி தினமும் வழிபட்டு வருகிறார். இது மட்டும் இன்றி தமிழ் பெண் நடிகை குஷ்பு மற்றும் முன்னாள் நடிகை நமீதா ஆகியோர்களுக்கு அவர்களது ரசிகர்கள் கோயில்கள் கட்டி வழிபாடு நடத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கிராமங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் – மத்திய அரசுடன் ஜல் ஜீவன் திட்டம் 2.0 திட்டத்துக்கு ஒப்புதல்