கிராமங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் – மத்திய அரசுடன் ஜல் ஜீவன் திட்டம் 2.0 திட்டத்துக்கு ஒப்புதல்
ஜல் ஜீவன் திட்டம் 2.0 திட்டத்தை செயல்படுத்துவதற்காக முதலமைச்சர் விஜய் மற்றும் மத்திய அரசின் ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த திட்டம் 2028 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஜல் ஜீவன் திட்டத்தால் கிராம மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜல் ஜீவன் திட்டம் 2.0 திட்டத்தை செயல்படுத்துவதற்காக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் மத்திய அரசின் ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனையடுத்து இந்த திட்டம் 2028 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஜல் ஜீவன் திட்டத்தால் கிராம மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும். தமிழகத்துக்கு கிடைக்கவேண்டிய தொகையில் முதல்கட்டமாக ரூ.2,177.27 கோடி நிதி கிடைக்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியான அறிவிப்பில், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ச.ஜோசப் விஜய் மற்றும் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் ஆகியோர் முன்னிலையில் உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) 2.0 செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.




இதையும் படிக்க : பரந்தூர் விமான நிலையம்… முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்க திட்டம்.. என்ன முடிவெடுக்கப் போகிறார் விஜய்!
மத்திய அரசுடன் ஜல் ஜீவன் திட்டம் 2.0 திட்டத்துக்கு ஒப்புதல்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (2.6.2026) சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்தும், மாண்புமிகு ஒன்றிய அரசின் ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு.சி.ஆர். பாட்டீல் அவர்கள் புதுதில்லியிலிருந்தும் கலந்து கொண்ட காணொலிக் காட்சிக் கூட்டத்தில், உயிர் நீர்… pic.twitter.com/mTgyoYkBSn
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 2, 2026
மேலும், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் ஜூன் 2, 2026 இன்று சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்தும், மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் டெல்லியிலிருந்தும் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்து கொண்ட கூட்டத்தில், உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) 2.0 திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட செயலாக்கக் காலத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
ஜல் ஜீவன் மிஷன் திட்டம் முதற்கட்டமாக 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டது. தற்போது ஒன்றிய அரசினுடைய அமைச்சரவையின் ஒப்புதலின் அடிப்படையில் இத்திட்டம் 2028 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : ஸ்கூல் ஃபீஸ் எவ்வளவு? விவரமா எழுதி போடணும் – தனியார் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு!
இந்த திட்டத்தின் முதற்கட்டமாக, ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய ஜல் ஜீவன் மிஷன் மற்றும் மாநில அளவிலான திட்ட ஒப்புதல் குழுவின் ஒப்புதலுடன் தமிழ்நாட்டிலுள்ள 46.71 லட்சம் வீடுகளுக்கு வழங்கப்பட்டு, 1.86 கோடி மக்கள் பயன்பெறும் வகையில், 45 புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் , 56 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை மறுசீரமைப்பு செய்தல் மற்றும் 21.258 ஒற்றைக் கிராமத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட உயிர் நீர் இயக்கத் திட்டத்தின் கீழ், ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பீடு ரூ.18.123.05 கோடி ஆகும். இதில் ஒன்றிய அரசின் பங்கு ரூ.9,025.68 கோடி மற்றும் தமிழ்நாடு அரசின் பங்கு ரூ.9,097.37 கோடி ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.