AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆக்‌ஷன் நாயகியாக சமந்தா நடிப்பில் ஓடிடியில் வெளியான மா இண்டி பங்காரம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

Maa Inti Bangaaram Movie OTT Review Here | தெலுங்கு சினிமாவில் நடிகை சமந்தா ரூத் பிரபு நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் மா இண்டி பங்காரம். இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது.

ஆக்‌ஷன் நாயகியாக சமந்தா நடிப்பில் ஓடிடியில் வெளியான மா இண்டி பங்காரம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
மா இண்டி பங்காரம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Jul 2026 19:34 PM IST

தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருகிறார் நடிகை சமந்தா ரூத் பிரபு. இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து சமீபகாலமாக நடிகை சமந்தா ரூத் பிரபு நாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மா இண்டி பங்காரம். ஆக்‌ஷன் காமெடி ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்தப் படம் கடந்த 19-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் பிவி நந்தினி ரெட்டி இயக்கி உள்ள இந்தப் படம் திரையரங்குகளில் விமர்சன ரீதியாம மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

அதன்படி படம் உலக அளவில் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி ஓடிடியில் வெளியாகி உள்ள இந்தப் படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்தின் கதை என்ன?

சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்த சம்ந்தா அனாதை ஆசரமத்தில் வளர்கிறார். இவர் மிகப்பெரிய குடும்பத்தை சேர்ந்த நாயகனை திருமணம் செய்துக்கொள்கிறார். மருத்துவராக சமந்தாவின் கணவர் குடும்பம் அந்த ஊரிலேயே மதிப்பு மிக்க குடும்பமாக இருக்கிறது. சின்ன வயதில் இருந்து குடும்பமே இல்லாமல் இருந்த சமந்தாவிற்கு அந்த குடும்பம் அதிக அன்பை கொடுக்க அது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

Also Read… சூர்யா48 பட ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? – வைரலாகும் தகவல்!

தற்போது குடும்பம் கணவர் என மகிழ்ச்சியாக இருக்கும் சமந்தாவிற்கு கடந்த காலத்தில் சில கசப்பான சம்பவங்கள் நடந்துள்ளது. அந்த கசப்பான அனுபவங்கள் தற்போதைய வாழ்க்கையை பாதிக்கும் விதத்தில் இருந்த போது அதனை அவர் எப்படி சரி செய்தார் தனது திருமண வாழ்க்கையை தக்க வைத்துக்கொண்டாரா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… Sivakarthikeyan: ஹீரோயினுக்கு 4 மணிநேரம் இன்டெர்வியூ வெச்சாரு நெல்சன் – சிவகார்த்திகேயன் பகிர்ந்த கலகலப்பு சம்பவம்!

Follow Us