AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jana Nayagan: முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் பட டிக்கெட் முன்பதிவு எப்போது தொடங்கும்?

Jana Nayagan Movie Ticket Booking: தமிழக முதலமைச்சர் விஜய், சினிமாவில் இறுதியாக நடித்திருந்த திரைப்படம்தான் ஜன நாயகன். இந்த படமானது கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு, வெளியாக தயாராகியுள்ளது. அந்த வகையில், இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு எப்போது தொடங்குகிறது மற்றும் அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Jana Nayagan: முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் பட டிக்கெட் முன்பதிவு எப்போது தொடங்கும்?
ஜன நாயகன் படத்தின் டிக்கெட் முன்பதிவுImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 17 Jul 2026 15:07 PM IST

கோலிவுட் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவந்த திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இயக்குநர் எச்.வினோத் (H Vinoth) இயக்கியிருந்த இப்படத்தில், முதல்வர் விஜய் (CM Vijay) நாயகனாக நடித்திருந்தார். இவர் சினிமாவில் நடிகராக இறுதியாக நடித்திருந்த திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தளபதி விஜய், தமிழகத்தின் முதலமைச்சராக பணியாற்றிவரும் நிலையில், அவர் இறுதியாக நடித்திருந்த படம் ஜன நாயகன். இந்த படத்தில் முதல்வர் விஜய்யுடன், நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே (Pooja Hegde), மமிதா பைஜூ (Mamitha Baiju), பிரியாமணி மற்றும் நரேன் போன்ற பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக காத்திருந்த நிலையில், சென்சார் பிரச்சனையின் காரணமாக பல மாதங்களுக்கு தள்ளிப்போனது.

தற்போது இப்படத்திற்கு சென்சார் கிடைத்த நிலையில், 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு எப்போது தெடங்கும் ரசிகர்கள் எதிர்பார்த்துவருகிறார்கள்.

இதையும் படிங்க: முதலமைச்சர் விஜய் உடன் கலந்தாலோசித்து முடிவு செய்தோம் – ஜன நாயகன் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் விளக்கம்!

தமிழகத்தில் டிக்கெட் முன்பதிவு எப்போது தொடக்கம் :

தமிழகத்திலும் சில திரையரங்குகளில் ஜன நாயகன் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இப்படத்தின் FDFS காட்சிகள் தமிழகத்தில் 9 மணி அல்லது 6 மணியளவில் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. வரும் 20ம் தேதிக்குள் ஒட்டுமொத்த தமிழகத்திலும் முன்பதிவு தொடங்கும் என கூறப்படுகிறது.

ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

ஜன நாயகன் பட வெளிநாடு டிக்கெட் முன்பதிவு:

ஜன நாயகன் படத்தின் டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே மலேசியா, UK போன்ற வெளிநாடுகளில் தொடங்கிவிட்டது. அங்கு இந்திய நேரப்படி காலை 8:30 மணியளவில் FDFS காட்சிகள் அமைந்துள்ளதாம். மேலும் இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் சில பகுதிகளில் தொடங்கியுள்ளது. காலை 6 மணி முதல் FDFS காட்ச்சிகள் இருக்கிறதாம்.

இதையும் படிங்க: சூர்யா 47 படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்… வைரலாகும் தகவல்!

கேரளாவில் ஜன நாயகன் டிக்கெட் முன்பதிவு :

முதல்வர் விஜய்யின் ரசிகர்கள் பலரும் கேரளாவிலும் இருக்கும் நிலையில், ஜன நாயகன் படத்தின் மீது எதிர்பார்ப்புகளும் அதிகமாக உள்ளது. கேரளாவில் நாளை (ஜூலை 18 2026) டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறதாம். இதனால் டிக்கெட் சீக்கிரம் விற்று தீரும் என கூறப்படுகிறது.

Follow Us