AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரூ. 5,000 லஞ்சத்தை திரும்ப வாங்கிக்குங்க சார்!.. கதறிய ஏட்டு.. சிக்கிய எஸ்.ஐ.. பொள்ளாச்சியில் சம்பவம்!

Pollachi Bribe Case: பொள்ளாச்சியில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஒருவரிடம் வாங்கிய ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு கெஞ்சிய தலைமைக் காவல் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இந்த ஆடியோ வைரலாகி வருகிறது .

ரூ. 5,000 லஞ்சத்தை திரும்ப வாங்கிக்குங்க சார்!.. கதறிய ஏட்டு.. சிக்கிய எஸ்.ஐ.. பொள்ளாச்சியில் சம்பவம்!
பொள்ளாச்சி லஞ்ச விவகாரம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 20 Jul 2026 18:51 PM IST

பொள்ளாச்சியை சேர்ந்தவர் முகேஷ். இவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆன ஒரு பெண்ணுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டு இருவரும் கோயம்புத்தூரில் தனியாக தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்தப் பெண்ணை அவரது கணவர் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். இதனிடையே முகேஷ் பிரச்சனை செய்ததன் காரணமாக கணவன்- மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், இது தொடர்பாக கிழக்கு காவல் நிலைய போலீசார் பிரச்சனைக்கு காரணமான முகவரிசை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்கு, காவல் உதவி ஆய்வாளர் ஜான்சன் விசாரணை மேற்கொண்டு இனிமேல் பிரச்சனை செய்யக்கூடாது என்று மிரட்டியதாக தெரிகிறது.

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ். ஐ.

மேலும், முகேஷ் இடம் காவல் உதவி ஆய்வாளர் ஜான்சன் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாகவும் தெரிகிறது. இந்த விவகாரம் பொதுவெளியில் தெரிய வந்த நிலையில், சிறிது நேரத்திலேயே முகேஷ் தலைமை காவலர் நாகராஜனை தொடர்பு கொண்டு உதவி ஆய்வாளர் ஜான்சன் நீங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்க கூறியுள்ளார். எனவே, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என கேட்டு முகேஷிடம் பேசி உள்ளார். இதற்கு முகேஷ் நான் வெளியில் இருக்கிறேன். காலையில் கோயம்புத்தூர் வருவேன். இப்போது வர முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: அதிமுகவில் வெடித்தது பூகம்பம்: சி.வி. சண்முகம் தலைமையில் 1,300 பேர் கூண்டோடு ராஜினாமா!

பணமே வேண்டாம் ஆளை விடுங்க

அப்போது, லஞ்ச பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு தலைமை காவலர் முகேஷ் வற்புறுத்தி உள்ளார். அப்போது, உங்கள் காலில் வேண்டுமானாலும் நான் விழுகிறேன். கொடுத்த பணம் கொடுத்ததாகவே இருக்கட்டும். அந்த பணம் எனக்கு வேண்டாம் என்றும், இந்த பிரச்சனையில் இருந்து எனக்கு தீர்வு கிடைத்தால் போதும் என்றும் முகேஷ் கூறுகிறார். திருமணம் ஆகவில்லை என்று கூறி தான் அந்தப் பெண் என்னிடம் பழகினார். இனிமேல் நான் எந்த பிரச்சனைக்கும் வரமாட்டேன் என முகேஷ் அந்த தலைமை காவலரிடம் கூறியுள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்

இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது தமிழகத்தில் லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் தான் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் சம்பந்தப்பட்ட நபரை அழைத்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பழனி தண்டாயுதபாணி முருகன் கோயில் நில முறைகேடு பத்திரம் வெளியீடு.. பெரும் அதிர்ச்சி.. நடந்தது என்ன?

Follow Us