சிலம்பரசன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணி படம் கைவிட காரணம் என்ன?- தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் விளக்கம்!
Simbus STR49 Dropped: கோலிவுட் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகனாக நடித்து அசத்தி வருபவர் சிலம்பரசன். இவர், பார்க்கிங் பட இயக்குனரின் கூட்டணியில் இணைந்து பின் அதிலிருந்து விளக்கினார், அந்த படமானது சிலம்பரசன் கைவிட என்ன காரணம் என தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் விளக்கம் கொடுத்துள்ளார்.
நடிகர் சிலம்பரசன் (Silambarasan) தற்போது இயக்குநர் வெற்றிமாறனின் (Vetrimaaran) இயக்கத்தில், அரசன் (Arasan) என்ற திரைப்படத்தில் அதிரடி நாயகனாக நடித்துபவருகிறார். இப்படமானது தனுஷின் வட சென்னை (Vada Chennai) படத்தின் பின்னணி கதைக்களத்தில் தயாராகிவருகிறது. இதில் சிலம்பரசன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை யோகலட்சுமி நடித்துவருகிறார். இந்த கூட்டணி படமானது தற்போது இறுதிக்கட்ட பணிகளில் சிறப்பாக இருந்துவருகிறது. இப்படத்திற்கு முன் ஆகாஷ் பாஸ்கரனின் தயாரிப்பிலும், பார்க்கிங் பட (Parking) இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் (Ramkumar Balakrishnan) இயக்கத்திலும் சிம்பு ஒப்பந்தமான படம் STR49.
இதில் சிலம்பரசன், சந்தானம் மற்றும் கயாடு லோஹர் போன்ற பிரபலங்கள் இணைந்து நடிப்பதாக இருந்தது. இப்படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அது எதற்காக கைவிடபட்டது என்பது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: யாஷின் டாக்ஸிக் படத்திலிருந்து வெளியான ‘தடுமாறுதே’ வீடியோ பாடல்!
சிலம்பரசன் மற்றும் ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணி கைவிட காரணம்:
அண்மையில் நேர்காணலில் பேசிய இயக்குநரும், தயாரிப்பாளருமான ராம்குமார் பாலகிருஷ்ணன், அதில் ” இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், சிலம்பரசன் நடிக்கவிருந்த படம் கைவிடப்பட்டது. அதற்கான காரணம் என்னவென்றால், சிலம்பரசனுக்கு இப்படத்தின் திரைக்கதையில் சில சிக்கல்கள் இருந்தது” என அதில் அவர் கூறியுள்ளார். இதனாலே இப்படம் கைவிடப்பட்டது. தற்போது இயக்குநர் வெற்றிமாறனின் அரசன் படத்தில் நாயகனாக நடித்துவரும் நிலையில், பின் டியூட் பட இயக்குநருடன் புது படத்தில் சிலம்பரசன் இணையவுள்ளாராம்.
சிலம்பரசனின் படம் கைவிடப்பட்டது குறித்து ஆகாஹ்ஸ் பாஸ்கரன் பேசியது தொடர்பாக வைரலாகும் பதிவு:
Producer #AakashBaskaran:
“#STR51 with Director Ramkumar Balakrishnan has been dropped, because #SilambarasanTR has some issues with the script❌#D56: #Dhanush – Tamilarasan Pachamuthu film is on track, we will start shooting soon. In fact we had already sold OTT rights for… pic.twitter.com/6YBYRcVBav— AmuthaBharathi (@CinemaWithAB) July 21, 2026
தனுஷின் 56வது படத்தை தயாரிக்கும் ஆகாஷ் பாஸ்கரன்:
இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், தனுஷ் தனது 56வது படத்தில் நடிக்கவுள்ளார். இதை டான் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கவுள்ளார். தற்போது தனுஷ், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் ஓம் என்ற படத்தில் நடித்துவருகிறார். இதையடுத்து D56 படத்தில் இணையவுள்ளார்.
இதையும் படிங்க: அமரன் படத்திற்காக தேசிய விருது வென்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி – வாழ்த்து தெரிவித்த சாய் பல்லவி!
தற்போது இப்படத்தில் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்றுவருவதாகவும், விரைவில் ஷூட்டிங் ஆரம்பமாகும், இப்படத்தின் ஓடிடி உரிமைகளை ஏற்கனவே விற்றுவிட்டோம் என்று ஆகாஷ் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். தற்போது இது தொடர்பான தகவல்களும் இணையத்தில் வைரலாகிவருகிறது.