ஓடிடியில் வெளியாகி உள்ள பேட்ரியாட் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
Patriot Movie OTT Review Here | மலையாள சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்து திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற பேட்ரியாட் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. அந்தப் படம் எப்படி இருக்கிறது என்று தற்போது பார்க்கலாம்.
மலையாள சினிமாவில் உச்ச நடிகர்களாக உள்ளவர்கள் நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி. இவர்கள் இருவரும் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் இணைந்து பலப் படங்களில் நடித்து உள்ளனர். தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் இணைந்து நடித்த இவர்கள் இருவரும் கடந்த 18 வருடங்களாக இணைந்து நடிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரும் இணைந்து நடித்து உள்ளனர். அந்தப் படம் தான் பேட்ரியாட். கடந்த மே மாதம் 1-ம் தேதி 2026-ம் ஆண்டு பேட்ரியாட் படம் திரையரங்குகளில் வெளியானது. சயின்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் மகேஷ் நாராயணன் எழுதி இயக்கி உள்ளார். படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். அதன்படி நடிகர்கள் ஃபகத் பாசில், குஞ்சக்க போபன், நயன்தாரா, ராஜிவ் மேனன், ஸாரின் ஷிஹாப், தர்ஷனா ராஜேந்திரன், ரேவதி, பிரகாஷ் பெலவாடி, இந்திரன்ஸ், கிரேஷ் ஆண்டனி, ஜினு ஜோசஃப், ஷாஹீன் சித்திக், இஷான் ஷௌகத், ஷிவதா, ஸ்ரீபார்வதி, கீதி சங்கீதா, சுதி கோழிக்கோடு, அமலா ரோஸ் குரியன், வைஷாக் சங்கர், வினீத் தட்டில் டேவிட், சாம்சன் மேத்யூ வலியபரம்பில், சான்யா நாயர் மற்றும் சனல் அமன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
பேட்ரியாட் படம் எப்படி இருக்கிறது?
பேட்ரியாட் படத்தில் பாதுகாப்பு அமைச்சராக உள்ள ராஜிவ் மேனன் தன் மீது உள்ள வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக இராணுவத் தர உளவு மென்பொருளான பெரிஸ்கோப் என்ற சாஃப்ட்வேரை பயன்படுத்துகிறார். இது தங்களது லேப்டாப்பில் இருக்கிறதா என்பதே அதனை பயன்படுத்துபவர்களுக்கு தெரியாத ஒரு சாஃப்ட்வேராக உள்ளது. ராஜிவ் மேனன் தனது மகன் ஃபகத் பாசில் மூலம் இந்த தவறை செய்வதை கண்டுபிடித்த மத்திய அமைச்சராக உள்ள ரேவதி அவரை மிரட்டுகிறார்.




உண்மைகள் அனைத்தும் தெரிந்த ரேவதி தனக்கு உதவி செய்யுமாறு ராணுவத்தில் சயிண்டிஸ்டாக உள்ள மம்முட்டியிடும் அனைத்து உண்மைகளையும் கூறிகிறார். இப்படி இருக்கும் நிலையில் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரேவதியை ராஜிவ் மேனனும் அவரது மகன் ஃபத் பாசில் இணைந்து கொலை செய்துவிடுகிறார்கள்.
Also Read… ஜூன் மாதம் வெளியீட்டில் இருந்து ஒத்திவைக்கப்படும் ஜன நாயன் படம் – தொடரும் சென்சார் சிக்கல்!
தொடர்ந்து அனைத்து உண்மைகளும் மம்முட்டிக்கு தெரியும் என்பதை அறிந்த அவர்கள் மம்முட்டியையும் கொலைசெய்ய பல முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இந்த சூழலில் தன்னுடன் இராணுவத்தில் பணியாற்றிய நண்பன் மோகன்லாலை துணைக்கு அழைக்கும் மம்முட்டி பாதுகாப்பு அமைச்சரும் அவரது மகனும் இணைந்து செய்த தவறுகளை எப்படி மக்களிடம் வெளிப்படுத்தினார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… அரசன் படம் குறித்து தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட் – வைரலாகும் வீடியோ