Magudam: விஷாலின் மகுடம் பட 3வது பாடல் ரிலீஸ் எப்போது? வெளியான அறிவிப்பு இதோ!
Magudam Movie 3rd Single Update: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஷால். இவர் இவர் இயக்குனராக இயக்கி, நடித்துள்ள புது படம் மகுடம். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில், 3வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பான புரோமோ இணையத்தில் பரவிவருகிறது.
நடிகர் விஷால் (Vishal) நடிப்பில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக எந்த புது படங்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகராக தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பணியாற்றிவரும் நிலையில், தற்போது இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார். இவரின் இயக்கத்தில் முதல் முதலாக வெளியாக காத்திருக்கும் படம்தான் மகுடம் (Magudam). இதை ஆரம்பத்தில் இயக்குநர் ரவி அரசு (Ravi Arasu) இயக்குவதாகதொடங்கப்பட்ட நிலையில், பின் அவர் இதிலிருந்து விலகிவிட்டார். பின் விஷால் முழு படத்தின் கதையையும் மாற்றியமைத்து, தானே இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஷால் கிட்டத்தட்ட 3 வேடங்களில் நடித்துள்ளார்.
மேலும் அவருடன் நடிகைகள் துஷாரா விஜயன் (Dushara Vijayan) மற்றும் அஞ்சலி (Anjali) போன்ற நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது அதிரடி கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் 3வது பாடல் எப்போது வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: தனுஷின் பர்த்டே ஸ்பெஷலாக வெளியாகும் ஓம் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் – அப்டேட் இதோ!
மகுடம் படத்தின் 3வது பாடல் ரிலீஸ் தேதி:
மகுடம் படத்திற்கு முழுவதுமாக ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில், பின்னணி இசை மற்றும் பாடல்கள் உருவாக்கப்படுவது. ஏற்கனவே “ரைஸ் ஆப் லிங்கா” மற்றும் “நச்சிந்தி மச்சானே” என இரு பாடல்கள் வெளியான நிலையில், “கலங்காதே” என்ற பாடல் வரும் 2026ம் ஆண்டு ஜூலை 27ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டேவின் ஸ்ரீ ஸ்ரீ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!
மகுடம் திரைப்படத்தின் 3வது சிங்கிள் ரிலீஸ் குறித்து விஷால் வெளியிட்ட அறிவிப்பு பதிவு:
The audience have spoken, Now it’s time for you to experience the emotion.#Kalangaadhe – The highly awaited third single from #Magudam / #Makutam – Releasing this Monday, 27th July.https://t.co/oXw7wu6geL
From the Soulful Vocals of @gvprakash#DirectorVishal #SGF99 pic.twitter.com/p7HkeYqEk2
— Vishal (@VishalKOfficial) July 25, 2026
மகுடம் திரைப்படத்தின் ரிலீஸ்:
மகுடம் திரைப்படமானது அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஷால் மொத்தம் 3 வேடங்களில் நடித்துள்ள நிலையில், இதன் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதியில் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் கவினின் ஹாய் போன்ற திரைப்படங்கள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.