கமல்ஹாசனின் அத்தனை பிளானும் வீணானது? தக் லைஃப் படத்தின் ஓடிடி அப்டேட்
Thug Life Movie: நடிகர் கமல் ஹாசனின் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் தக் லைஃப். இந்தப் படத்தின் திரையரங்கு வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி வெளியீடு 8 வாரங்களுக்குப் பிறகு என்று கமல் ஹாசன் அறிவித்து இருந்தார். ஆனால் தற்போது 4 வாரத்திலேயே படம் ஓடிடியில் வெளியாக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் கமல் ஹாசன் (Kamal Haasan) நடிப்பில் இயக்குநர் மணிரத்னம் (Director Maniratnam) இயக்கத்தில் கடந்த 5-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு கர்நாடகாவைத் தவிற உலகம் முழுவது திரையரங்குகளில் வெளியான படம் தக் லைஃப். இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வசூல் சாதனைப் படைக்கும் என்று நினைத்த நிலையில் படு தோல்வியை சந்தித்தது படக்குழுவினர் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. அதன்படி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பு நடிகர் கமல் ஹாசன் படம் ஓடிடியில் 4 வாரங்களில் அல்ல 8 வாரங்களுக்குப் பிறகே வெளியாகும் என்று தெரிவித்து இருந்தார். ஆனால் தக் லைஃப் படம் திரையரங்குகளில் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில் தற்போது 4 வாரங்களிலேயே ஓடிடியில் வெளியாக உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.
தக் லைஃப் படத்தின் ஓடிடி வெளியீடு 8 வாரத்தில் இருந்து 4 வாரமானது ஏன்?
தக் லைஃப் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுக் கொண்டது. மேலும் தென்னிந்திய சினிமாவைப் பொருத்தவரை ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்றால் அந்தப் படம் ஹிட் அடிக்குதோ இல்லையோ அதில் இருந்து 4 வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் என்பது விதி.
ஆனால், இந்தி சினிமாவில் ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்றால் அது ஹிட் ஆனாலும் ஆகவில்லை என்றாலும் 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டு. தென்னிந்திய மொழி சினிமா படங்கள் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலைப் பெற இந்தி சினிமாவில் அதிக திரையரங்குகளில் வெளியாக வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஆனால் 4 வாரத்தில் ஓடிடியில் வெளியாகும் என்ற எந்தப் படத்தையும் இந்தி சினிமாவில் அதிக திரையரங்குகளை கொடுக்கமாட்டார்கள். இதன் காரணமாக கமல் ஹாசன் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திடம் பேசி தக் லைஃப் படத்தின் ஓடிடி வெளியீட்டை 8 வாரங்களுக்குப் பிறகு வெளியிட ஒப்புதல் வாங்கி வைத்தார்.
ஆனால் படம் திரையரங்குகளில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதன் காரணமாக 3 வாரங்கள் முடியும் போது பல திரையரங்குகளில் தக் லைஃப் படத்தின் காட்சிகள் கூட்டம் இல்லாமல் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் படம் 8 வாரங்கள் இல்லாமல் 4 வாரத்தின் முடிவிலேயே நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
தக் லைஃப் படம் குறித்து நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The Vinveli Naayagan is back—and how?! 👀🔥
Thug Life is coming to Netflix in Tamil, Telugu, Malayalam, Kannada, and Hindi after its theatrical release!#NetflixPandigai pic.twitter.com/iktkBCQ18I— Netflix India South (@Netflix_INSouth) January 15, 2025