AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் விக்ரமின் சூப்பர் ஹிட் படம் சேது!

Actor Vikram: நடிகர் விக்ரமின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியபடம் சேது. இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான இந்தப் படம் தற்போது 25 வருடங்களை கடந்துள்ளது. இந்த நிலையில் படத்தை மீண்டு டிஜிட்டல் முறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றது.

மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் விக்ரமின் சூப்பர் ஹிட் படம் சேது!
சேதுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Jun 2025 18:25 PM IST

நடிகர் விக்ரம் (Actor Vikram) கடந்த 1990ம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் பல படங்களில் நடித்தும் அவர் பெரிய அளவில் ரசிகர்களிடைம் இருந்து வரவேற்பைப் பெறவில்லை. மேலும் நடிகர் அஜித் உள்ளிட்டோருக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் விக்ரம் பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 9 வருடங்களுக்கு மேலாக தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்து வந்தாலும் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தப் படம் சேது தான். இயக்குநர் பாலா இயக்கத்தில் கடந்த 1999-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் சேது.  இந்தப் படத்தில் நடித்த பிறகுதான் விக்ரமின் சினிமா வாழ்க்கையே மாறியது என்று சொன்னால் மிகையாகாது.

நடிகர் விக்ரமின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட சேது படம்:

நடிகர் விக்ரம் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் சேது. இந்தப் படத்தை இயக்குநர் பாலா இயக்கி இருந்தார். இதில் நடிகர் விக்ரம் உடன் இணைந்து நடிகர்கள் அபிதா, சிவகுமார், ஸ்ரீமன், லாவன்யா, மோகன் வைத்யா மற்றும் மனோபாலா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் வெளியான போது தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை தட்டிக் தூக்கியது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் விக்ரமிற்கு சியான் என்ற செல்லப் பெயர் வைக்கப்பட்டு இருக்கும். அதன்படி இந்தப் படத்திற்கு பிறகே அவரை அனைவரும் சியான் விக்ரம் என்று அன்புடன் அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 25 வருடங்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரீ ரிலீஸாகும் விக்ரமின் சேது படம்:

தென்னிந்திய சினிமாவில் முன்னதாக வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தப் படங்களை படக்குழு தற்போது மீண்டும் டிஜிட்டல் வடிவில் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்து வருவது தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. அந்த வகையில் தற்போது நடிகர் விக்ரம் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சேது படத்தை 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் டிஜிட்டல் முறையில் படத்தை வெளியிட திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

நடிகர் விக்ரமின் இன்ஸ்டா பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Vikram (@the_real_chiyaan)

Follow Us