கோலிவுட் சினிமாவில் இந்த வாரம் தியேட்டரில் வரிசைக் கட்டும் படங்கள் – லிஸ்ட் இதோ
Kollywood This Week Theatre Release: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் புதுப் படங்களின் வரவு தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றது. இந்த நிலையில் இந்த வாரம் மூன்று புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதன்படி அந்தப் படங்களின் விவரங்கள் மற்றும் அதில் நடித்த நடிகர்களின் விவரங்களை தற்போது பார்க்கலாம்.

மார்கன்: இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள படம் மார்கன். இந்தப் படத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி (Vijay Antony) நாயகனாக நடித்து உள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் பிரிஜிதா, சமுத்திரக்கனி (Samuthirakani), அஜய் திஷன், மகாநதி சங்கர், தீப்ஷிகா, வினோத் சாகர் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தில் நாயகனாக நடித்தது மட்டும் இன்றி படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மார்கன் படத்தில் தொடர்ந்து பெண்களை கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன் யார் என்பது குறித்து விசாரிக்கும் காவல் துறை அதிகாரியாக நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது படம் வருகின்ற ஜூன் மாதம் 27-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய் ஆண்டனியின் மார்கன் படத்தின் ட்ரெய்லர்:
மிஸ்டர். ஜூ கீப்பர்: விஜய் தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு, குவ் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே நன்கு பரிச்சையமான நபராக மாறியவர் புகழ். இவர் தற்போது தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்த படம் மிஸ்டர். ஜூ கீப்பர். இந்தப் படத்தில் நடிகர்கள் ஷிரின் காஞ்சவாலா, சிங்கம் புலி, மாரிமுத்து, இம்மான் அண்ணாச்சி, பிரமிட் குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படம் உருவாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆகி தற்போது தான் திரையரங்குகளில் வெளியாக தயாராகி உள்ளது. அதன்படி படம் வருகின்ற ஜூன் மாதம் 27-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவி புகழின் மிஸ்டர். ஜூ கீப்பர் படத்தின் ட்ரெய்லர்:
லவ் மேரேஜ்: இயக்குநர் சண்முகப் பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லவ் மேரேஜ். இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள் தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம், கஜராஜ், கோடாங்கி வடிவேலு, வெற்றியாளர் ராமச்சந்திரன், யாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காமெடி செண்டிமெண்டை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியான போதே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படம் வருகின்ற ஜூன் மாதம் 27-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.