குட் நைட் பட இயக்குநருக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த சர்ப்ரைஸ் – வைரலாகும் போஸ்ட்
Director Vinayak Chandrasekaran X Post: நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படம் குட் நைட். இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் (Director Vinayak Chandrasekaran) எழுதி இயக்கி கடந்த 2023-ம் ஆண்டு 12-ம் தேதி மே மாதம் திரையரங்குகளில் வெளியான படம் குட் நைட். இந்தப் படத்தில் நடிகர் மணிகண்டன் நாயகனாக நடித்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இயக்குநரை சமீபத்தில் நேரில் சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan) அவருக்கு சர்ப்ரைஸ் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து சிவகார்த்திகேயனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தனது எக்ஸ் தள பக்கத்தில் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அந்தப் பதிவில் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் கூறியதாவது, இந்த அன்பான பிறந்த நாள் பரிசிற்காக மிக மிக நன்றி சிவகார்த்திகேயன் அண்ணா. மேலும் இந்த ஆண்டின் பிறந்த நாள் எனக்கு மிகவும் சிறப்பான ஒன்றாக அமைந்துள்ளது என்று சிவகார்த்திகேயனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




இணையத்தில் கவனம் பெறும் இயக்குநர் விநாயக் சந்திரசேகரனின் எக்ஸ் தள பதிவு:
Thank you so much for the wishes and gift @Siva_Kartikeyan anna ❤️
This year bday is very special !! pic.twitter.com/9tG5izPNQ9— Vinayak Chandrasekaran (@imvinayakk) June 24, 2025
மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற விநாயக் சந்திரசேகரனின் குட் நைட் படம்:
நடிகர் மணிகண்டன் மிடில் கிளாஸ் பையனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மட்டும் இன்றி தென்னிந்திய ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் குட் நைட். இந்தப் படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து நடிகர்கள் மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள், ரைச்சல் ரெபேகா, சைவம் கலா, நிகிலா சங்கர் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
ரொமாண்டிக் காமெடி அடைப்படையில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் குரட்டையால் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு காதல் கடந்து செல்கிறது என்பதை இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் மிகவும் அழகாக இந்தப் படத்தில் காட்டியிருப்பார்.
படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது போல இசையமைப்பாளர் சான் ரோல்டன் இசையில் இந்தப் படத்தில் இருந்து வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.