AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ராஜூ ஜெயமோகனின் பன் பட்டர் ஜாம் பட வீடியோவைப் பார்த்து பாராட்டிய விஜய்!

Bun Butter Jam - Stealer - A Special Glimpse | ஜன நாயகன் படத்தில் பிசியாக நடித்து வருகிறார் நடிகர் தளபதி விஜய். இவர் சமீபத்தில் நடிகர் ராஜூ ஜெயமோகன் நடிப்பில் உருவாகியுள்ள பன் பட்டம் ஜாம் படத்தின் கிளிம்ஸ் வீடியோவைப் பார்த்து ராஜூ ஜெயமோகனை அழைத்து பாராட்டியுள்ளார்.

ராஜூ ஜெயமோகனின் பன் பட்டர் ஜாம் பட வீடியோவைப் பார்த்து பாராட்டிய விஜய்!
ராஜு ஜெயமோகன், விஜய்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Jun 2025 15:35 PM IST

நடிகர் ராஜூ ஜெயமோகன் (Actor Raju Jayamohan) நாயகனாக நடித்துள்ள படம் பன் பட்டர் ஜாம். சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களிலும், நாயகன்களின் நண்பராகவும் நடித்து வந்த நடிகர் ராஜூ ஜெயமோகன் தற்போது நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் கிளிம்ஸ் வீடியோவைப் படக்குழு நேற்று வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் பன் பட்டர் ஜாம் படத்தின் வீடியோவைப் பார்த்த நடிகர் தளபதி விஜய் (Thalapathy Vijay) நடிகர் ராஜு ஜெயமோகனை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார். இதனை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் ராஜு ஜெயமோகன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளதாவது ”நமது அன்பான தளபதியிடம் இருந்து அழைப்பு வந்தது. அப்போது பன் பட்டர் ஜாம் படத்தின் கிளிம்ஸ் வீடியோவைப் பார்த்ததாக தளபதி விஜய் கூறினார்.

மேலும் அந்த வீடியோவைப் பார்க்கும் போது இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்று தோனுவதாகவும் அவர் தெரிவித்தார். இதைவிட வேற என்ன எனக்கு வேணும். இன்றைக்கு தளபதி விஜய் சிரிப்பதற்கு நான் காரணமாக இருந்து இருக்கேன் என்பதே இந்த உலகில் சிறந்த விசயமாக எனக்கு தோன்றுகின்றது. மிகவும் நன்றி தலைவறே” என்று அந்தப் பதிவில் ராஜூ ஜெயமோகன் தெரிவித்து இருந்தார்.

விஜயுடன் பேசியது குறித்து நடிகர் ராஜூ ஜெயமோகனின் எக்ஸ் தள பதிவு:

ராஜூ ஜெயமோகனின் நடிப்பில் உருவாகியுள்ள பன் பட்டர் ஜாம்:

இயக்குநர் ராகவ் மிர்தாத் எழுதி இயக்கியுள்ள படம் பன் பட்டர் ஜாம். நடிகர் ராஜூ ஜெயமோகன் நாயகனாக அறிமுகம் ஆகும் இந்தப் படத்தில் நடிகர்கள் ஆத்யா பிரசாத், பவ்யா த்ரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, வி.ஜே.பப்பு ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் நடிகர்கள் சார்லி மற்றும் சரண்யா பொன்வண்ணன் இருவரும் நடிகர் ராஜூ ஜெயமோகனின் பெற்றோர்களாக நடித்துள்ளனர், முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் வருகின்ற ஜூலை மாதம் 18-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Follow Us