கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநருடன் இணையும் நடிகர் மணிகண்டன்?
Actor Manikandan: தமிழ் சினிமாவில் திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, நடிகர் என பண்முகத் தன்மையோடு வலம் வருபவர் நடிகர் மணிகண்டன். இவர் இறுதியாக குடும்பஸ்தன் படத்தில் நடித்து இருந்தார். இந்த நிலையில் அடுத்ததாக இவரது படத்தை இயக்க உள்ளது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் என்ற பட்டியளில் முன்னணியில் இருப்பவர் நடிகர் மணிகண்டன் (Actor Manikandan). மாஸ் நடிகர்கள் ஒருபுறம் இருந்தாலும் மக்கள் வாழ்க்கையை படமாக எடுக்கும் படங்களில் நாயகனாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் மணிகண்டன். 2013-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகர் மணிகண்டன் 2018-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெறத் தொடங்கினார். இதில் ரஜினிகாந்தின் இளைய மகனாக தனது சிறப்பான நடிப்பை நடிகர் மணிகண்டன் வெளிப்படுத்தியிருப்பார். இந்தப் படத்தை தொடர்ந்து சில்லுக் கருப்பட்டி, பாவக் கதைகள் என தொடர்ந்து நடித்து வந்த மணிகண்டன் ஜெய் பீம் படத்தின் மூலம் நாயகன் அந்தஸ்தை அடைந்தார்.
அதனைத் தொடர்ந்து படங்களில் நாயகனாக நடித்து வரும் நடிகர் மணிகண்டன் தற்போது தனது புதிய படத்திற்காக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி உடன் கூட்டணி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இவர் முன்னதாக நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.




தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு 50 படம் தள்ளிப்போகிறதா?
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடையே பிரபலம் ஆன இயக்குநர் தேசிங்கு பெரியசாமி அடுத்ததாக யாரை இயக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சிலம்பரசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது 50-வது படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானது.
ஆனால் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளிப்போவதால அதற்கு முன்பாக ஒரு சிறியப் படத்தை இயக்க இயக்குநர் தேசிங்கு பெரியசாமி முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் அந்தப் படத்தில் நடிகர் மணிகண்டனை நாயகனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
நடிகர் மணிகண்டன் இறுதியாக நடித்து வெளியான படம் குடும்பஸ்தன். முன்பு இவரது நடிப்பில் வெளியான படங்கள் வரவேற்பைப் பெற்றது போல இந்தப் படமும் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் நடிகர் மணிகண்டன் குடும்பஸ்தன் பட இயக்குநர் இயக்கத்தில் தான் நடிக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய தகவல் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் மணிகண்டன் – தேசிங்கு பெரியசாமி கூட்டணி குறித்த தகவல்:
Director #DesinghPeriyasamy to do his next film with #Manikandan, which is of small scale👌
After completing this film he will do #STR50, meanwhile #SilambarasanTR will complete VetriMaaran & Ashwath film 🤝 pic.twitter.com/w1iK3mhLOV
— AmuthaBharathi (@CinemaWithAB) June 24, 2025