Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நடிகை மீனாவுக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பா? நயினார் நாகேந்திரன் கொடுத்த பதில்

Nainar Nagendran On Actor Meena : நடிகை மீனா பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்த நிலையில், இதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் கொடுத்துள்ளார். பாஜகவுக்கு யார் வந்தாலும் நாங்கள் வரவேற்போம் என நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை மீனாவுக்கு  பாஜகவில் முக்கிய பொறுப்பா? நயினார் நாகேந்திரன் கொடுத்த பதில்
நயினார் நாகேந்திரன்Image Source: Instagram
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 25 Jun 2025 18:14 PM

சென்னை, ஜூன் 25 : நடிகை மீனாவுக்கு (Actor Meena) பாஜகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ( Tamil Nadu BJP Chief Nainar Nagendran) பதில் கொடுத்துள்ளார். சென்னை கமலாலயத்தில் 2025 ஜூன் 25ஆம் தேதியான இன்று செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது, அவரிடம் மீனாவுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், ” பாஜகவில் அதிகமானோர் இணைந்து வருகின்றனர். அவர்களை நாங்கள் வரவேற்கிறோம். திமுக ஆட்சி முடிந்து அடுத்த வருடன் தேர்தல் நடக்க உள்ளது. முருக பக்தர்கள் மாநாடு நன்றாக நடத்தி முடிக்கப்பட்டது. ஒரு கட்சி வெற்றி பெறப்போவது என்றால் அனைவரும் இணைய தொடங்குவார்கள். அதனால், யார் கட்சிக்கு வந்தாலும் வரவேற்போம். கூட்டணியை உடைத்துவிடலாம் என நினைக்கிறார்கள். அது மட்டும் நடக்கவே நடக்காது” என்று கூறினார்.

மீனாவுக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பா?

சமீபத்தில் நடிகை மீனா குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பதிவிட்டு இருந்தார். அதில், “குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கரை சந்தித்தது பெருமையாக இருந்தது. உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.

அது என் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் வழிநடத்த உதவும் என்று நான் நம்புகிறேன். உங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி” என பதிவிட்டு இருந்தார். இதோடு இல்லாமல், பாஜக மூத்த தலைவர்களை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான வண்ணம் இருந்தன.

நயினார் நாகேந்திரன் பதில்

அதோடு, மாநில அளவில் பாஜகவில மீனாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என பேச்சுகள் எழுந்தது. ஏற்கனவே, நடிகைகள் ராதிகா, குஷ்பு ஆகியோர் பாஜகவில் உள்ள நிலையில், அந்த வரிசையில் மீனாவும் இணைய போவதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், அதற்கு நயினார் நாகேந்திரன் பதில் கொடுத்துள்ளார். யார் கட்சியில் சேர்ந்தாலும் வரவேற்போம் என விளக்கம் அளித்தார்.

மேலும் பேசிய அவர், “மத்திய உள்துறை அமைச்சரை தகாத வார்த்தைகளால் ஆ.ராசா பேசியுள்ளார். முதல்வர் ஸ்டாலினை மதிப்பிற்குரிய முதல்வர் என்று ஏன் சொல்லுகிறேன். முதல்வர் என்ற முறையில் அவரை மரியாதையுடன் பேசுகிறேன். அந்த தன்மையும், தமிழ் கலாச்சாரம் குறித்து பேசும் முதல்வர் ஸ்டாலின், ஆ.ராசாவின் பேச்சை அவர் அனுமதிக்கிறாரா?. எங்கள் கூட்டணி உறுதியானது. கூட்டணி உடையும் என்பதை இல்லை” என நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.