AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“அதிகார மமதை” ஓசி பஸ் சர்ச்சை.. திமுகவை கடுமையாக சாடிய நயினார் நாகேந்திரன்

DMK MLA Controvery remarks on Magalir Vidiyal Payanam : மகளிர் விடியல் பயணம் திட்டம் குறித்து பேசிய திமுக எம்எல்ஏ மகாராஜனுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிகார மமதையில், எளிய மக்களை எள்ளி நகையாடி ஏளனப்படுத்துவது ஏற்புடையதல்ல என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

“அதிகார மமதை” ஓசி பஸ் சர்ச்சை..  திமுகவை கடுமையாக சாடிய நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 12 Jun 2025 09:37 AM IST

சென்னை, ஜூன் 11 : மகளிர் விடியல் திட்டத்தின் (Magalir Vidiyal Payanam) மூலம் பேருந்தில் இலவசமாக பயணிக்கும் பெண்களை ஓசி பயணம் என திமுக எம்எல்ஏ (dmk mla maharajan) மகாராஜன் பேசிய கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் (nainar nagendran) திமுக எம்எல்ஏவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிரை “ஓசி” என்று திமுகவைச் சார்ந்த ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது. மக்கள் நலனை மேம்படுத்தும் போர்வையில் திட்டங்களை அமல்படுத்தி அதன் விளம்பரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதும், பின் பயனாளிகளை “ஓசி” என்று கீழ்த்தரமாக விமர்சிப்பதும் தான் திராவிட மாடல் போலும்.

“அதிகார மமதை”

ஒவ்வொரு முறையும் பெண் பயனாளிகளை விமர்சிப்பதில் காட்டும் முனைப்பை ஓட்டை உடைசலாக இருக்கும் பேருந்துகளை சரிபடுத்துவதிலோ அல்லது அனைத்து மகளிருக்கும் 1000 ரூபாய் கிடைப்பதை உறுதி செய்வதிலோ அரிவாலயம் தலைவர்கள் காட்டாதது ஏன்?

அதிகார மமதையில், எளிய மக்களை எள்ளி நகையாடி ஏளனப்படுத்துவது ஏற்புடையதல்ல. மகளிரை அவமதிக்கும் திமுக அரசு இனியாவது திருந்தட்டும்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கு முன்னதாக, முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கடும் கண்டனத்தை  பதிவு செய்திருந்தார்.

நயினார் நாகேந்திரன் கண்டனம்

திமுக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு

2021ஆம் ஆண்டு திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட முக்கியமான திட்டம் மகளிர் விடியல் பயணம் திட்டம். இந்த திட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடன் திமுக நிறைவேற்றியது. இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், விடியல் பயண திட்டம் தொடர்பாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன் சர்ச்சைக்குரிய கருத்தை பேசியுள்ளார். அதாவது, அவர் பேசுகையில், “பெண்கள் அனைவரும் ஓசி பேருந்தில் ஏறி தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி என ஓசியில் செல்லுங்கள். வீட்டில் உள்ள ஆண்கள் சமையல் செய்யட்டும்.

உங்க கிராமத்திற்கு ரோடு போட போகிறோம். அந்த வழித்தடத்தல் அரசு பேருந்து சேவை இயக்க உள்ளோம். அதில் பெண்கள் ஓசியில் பயணிக்கலாம். உங்கள் ஊருக்கு பேருந்து சேவை இயக்கிய பிறகு, ரயில், விமானம் என்று கேட்டு விடாதீர்கள்” என கூறியிருந்தார். இவரது பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. முன்னதாக, அமைச்சராக இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட பொன்முடி பேருந்தில் பயணிக்கும் பெண்களை ஓசி பஸ் என பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us