தி பாரடைஸ் படத்தின் 2-வது சிங்கிள் ரிலீஸ் எப்போது? வைரலாகும் அப்டேட்
The Paradise movie second single update | நடிகர் நானியின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் தி பாரடைஸ். இந்தப் படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் குறித்த அப்டேட் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகின்றது.
தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் நானி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் நானி நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் தி பாரடைஸ். இந்தப் படத்தினை இயக்குநர் ஸ்ரீ காந்த் ஒடேலா எழுதி இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் முன்னதாக தெலுங்கு சினிமாவில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் நானி நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
அதன்படி நடிகர்கள் மோகன் பாபு, பராகி விக்ரம் ரெட்டி மற்றும் ராகவ் ஜூயல் என பலர் இந்தப்ப் அடத்தில்ந் அடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் வருகின்ற 24-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.




தி பாரடைஸ் படத்தின் 2-வது சிங்கிள் ரிலீஸ் எப்போது?
மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து முதலாவதாக் ஆயாசே என்ற பாடல் வெளியானது. இந்த நிலையில் இந்த தி பாரடைஸ் படத்தில் இருந்து இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த படத்தில் முதல் பாடலை எழுதிய பாடலாசிரியர் ஷ்யாம் கசர்லாதான் இரண்டாவது பாடலையும் எழுத உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பாடல் தொடர்பான அப்டேட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இணையும் பிரபல நடிகையின் மகள்.. அட இவரா?
தி பாரடைஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A picture speaks a thousand words… and this one carries a thousand mass beats 🎶💥💥#TheParadise second single out very soon ❤🔥
GRAND RELEASE WORLDWIDE ON 24.09.26.
Natural Star @NameisNani in an @odela_srikanth cinema ❤️🔥
An @anirudhofficial musical 🎼… pic.twitter.com/gvldS9EiGQ— SLV Cinemas (@SLVCinemasOffl) August 25, 2026
Also Read… மயில் வீரா.. கார்த்தியின் சர்தார் 2 பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!