AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Immortal: ஃபேன்டஸி த்ரில்லர் கதையில்… ஜி.வி.பிரகாஷ் – கயாடு லோஹரின் இம்மார்ட்டல் பட ஹிட்டா? ஃபிளாப்பா?

Immortal Movie Review: தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், தென்னிந்திய சினிமாவில் இசையமைப்பாளாராகவும் பிரபலமானவர் ஜி.வி.பிரகாஷ். இவரின் நடிப்பிலும், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்திலும் உருவாகியுள்ள புதிய படம்தான் இம்மார்ட்டல். இப்படம் இன்று (04/09/2026) உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு கிடைத்த விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

Immortal: ஃபேன்டஸி த்ரில்லர் கதையில்… ஜி.வி.பிரகாஷ் – கயாடு லோஹரின் இம்மார்ட்டல் பட ஹிட்டா? ஃபிளாப்பா?
இம்மார்டல் ரிவியூ Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 04 Sep 2026 15:19 PM IST

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் (GV Prakash Kumar) நடிப்பில் 2026ம் ஆண்டில் 2வது வெளியாகியுள்ள திரைப்படம்தான் இம்மார்ட்டல் (Immortal). இந்த படத்தை அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா (Mariyappan Chinna) இயக்க, ட்ரைடென்ட் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar) நடித்துள்ளார். இந்த ஜோடியானது முதல் முறையாக இப்படத்தில் இணைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டில் ஆரம்பமான நிலையில், சிறப்பாக நடைபெற்றுவந்தது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் (Sam CS) இசையமைத்திருக்கும் நிலையில், பின்னணி இசை மற்றும் பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளது.இன்று (04/09/2026) இப்படம் உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்திற்கு கிடைத்துள்ள விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: கார்த்தியின் சர்தார் 2 படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்.. சென்சார் அப்டேட் இதோ!

ஜி.வி.பிரகாஷ் மற்றும் கயாடு லோஹரின் இம்மார்ட்டல் திரைப்படம் எப்படி இருக்கு:

இப்படம் அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கியுள்ள நிலையில், இது திரைப்படம் போல் இல்லை. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்க, லோஹர் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை கயாடு லோஹரின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருக்கிறதாம். ஹாலிவுட்டில் வெளியான ஆஃசெப்ஷன் படத்தை போலவே இப்படத்தின் கதைக்களம் கொஞ்சம் இருப்பதாக கூறப்படுகிறது.

இம்மார்ட்டல் படத்தின் கதைக்களம் எப்படி இருக்கு:

இப்படம் ஒரு காதல் நாடகமாகத் தொடங்கினாலும், மெதுவாக ஒரு விறுவிறுப்பான ஃபேன்டஸி த்ரில்லராக மாறுகிறதாம். மொத்தத்தில், மர்மம் மற்றும் ஃபேன்டஸி த்ரில்லர் அம்சங்களின் சரியான கலவையுடன் இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறதாம்.

இதையும் படிங்க: அரசன் 2027 பொங்கலுக்கு இல்லை.. ரிலீஸ் குறித்து சிலம்பரசன் கொடுத்த அப்டேட்!

இம்மார்ட்டல் படத்தில் நடிகர்களின் நடிப்பு எப்படி இருக்கு:

ஜி.வி. பிரகாஷ் ஒரு சிறப்பான நடிப்பை வழங்க, காயடு லோஹரின் மர்மமான கதாபாத்திரம் மேலும் சுவாரஸ்யத்தை சேர்க்கிறது. விஷுவல்ஸ், விஎஃப்எக்ஸ் மற்றும் பின்னணி இசை ஆகியவை முக்கிய சிறப்பம்சங்கள் படத்தின் கால அளவும் கச்சிதமாக உள்ளதாம். இப்படத்தின் ஹாலிவுட் பட ரேஞ்சில் அமைந்துள்ளதாம்.

இந்த இம்மார்ட்டல் படத்தை திரையரங்குகளில் பார்க்கலாமா?

இப்படம் மெதுவாக ஒரு திகில்-வாம்பயர் திரில்லர் பாணிக்குள் நகர்கிறது. மேலும், கதைக்கு ஒரு சுவாரசியமான திருப்பத்தை சேர்க்கும் ஒரு திருப்பமும் உள்ளது. மேலும் திரில்லர், காதல் மற்றும் விறுவிறுப்பான கதைக்களத்தை விரும்புபவர்கள் நிச்சயம் இந்த படத்தை பார்க்கலாம்.

Follow Us