Tamil Nadu Rains: நாளை இந்த 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை
Tamil Nadu weather today : தமிழகத்தில் பல்வேறு காற்றழுத்த தாழ்வுப் பாதை மற்றும் வளிமண்டல சுழற்சி நிலவுவதன் காரணமாக செப்டம்பர் 4, 2026 மற்றும் செப்டம்பர் 5, 2026 ஆகிய 2 நாட்கள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை, செப்டம்பர் 4 : தமிழகத்தில் பல்வேறு காற்றழுத்த தாழ்வுப் பாதை மற்றும் வளிமண்டல சுழற்சி நிலவுவதன் காரணமாக செப்டம்பர் 4, 2026 மற்றும் செப்டம்பர் 5, 2026 ஆகிய 2 நாட்கள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் செப்டம்பர் 5, 2026 நாளை மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை இந்த 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதைநிலவுகிறது. சுமார் 7.6 கிமீ உயரத்தில் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் செப்டம்பர் 3, 2026 நேற்று தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவிய பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை மேல் குறிப்பிட்ட வளிமண்டல சுழற்சியுடன் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : மதிய உணவை சாப்பிட்ட 19 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்.. ஊட்டி அரசு பள்ளியில் பரபரப்பு..




இதன் காரணமாக செப்டம்பர் 4, 2026 இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 5, 2026 நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்கள்.. கண்டறிய உறவினர்களுக்கு இலவச டிஎன்ஏ சோதனை.. தமிழ்நாடு அரசு ஏற்பாடு!!
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை பொறுத்தவரை செப்டம்பர் 4, 2026 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செப்டம்பர் 5, 2026 நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.