AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs AFG: திரும்பிய சஞ்சு சாம்சன்.. பார்ம் அவுட்டில் அபிஷேக்.. இந்திய பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?

Team India Probable Playing XI: முதல் டி20 போட்டியில் இஷான் கிஷன் விக்கெட் கீப்பராகத் தொடர வாய்ப்புள்ளது. துலீப் கோப்பை பைனலில் தெற்கு மண்டலத்திற்கு எதிராக சாதனை அளவாக 350 ரன்கள் எடுத்தது இஷானின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. எனவே, சஞ்சு சாம்சன் ஆடும் லெவனில் இடம்பிடிக்கக் காத்திருக்க வேண்டியிருக்கும்.

IND vs AFG: திரும்பிய சஞ்சு சாம்சன்.. பார்ம் அவுட்டில் அபிஷேக்.. இந்திய பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?
இந்திய அணி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 11 Sep 2026 17:18 PM IST

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் (IND vs AFG) அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகின்ற 2026 செப்டம்பர் 13ம் தேதி முதல் தொடங்குகிறது. டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டிக்கான ஆடும் லெவனைத் தேர்ந்தெடுப்பதில் இந்திய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு (Shreyas Iyer) ஒரு பெரிய சவால் காத்திருக்கிறது. குறிப்பாக, சஞ்சு சாம்சன் அணிக்குத் திரும்பியிருப்பதால், தொடக்க ஆட்டக்காரர் மற்றும் விக்கெட் கீப்பிங் இடங்களுக்கான போட்டி அதிகரித்துள்ளது.

ALSO READ: ஒருநாள் அணியில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கமா..? அடிபடும் திலக் வர்மா பெயர்!

வைபவ் சூர்யவன்ஷியா..? சஞ்சு சாம்சன்..?

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும். ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தால் தொடர் நாயகன் விருதை வைபவ் வென்றார். எனவே, இந்திய அணியில் அவரது இடம் இப்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது போல் தெரிகிறது. இதற்கிடையில், ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை இழந்த பிறகு சஞ்சு சாம்சன் அணிக்குத் திரும்பியுள்ளார். இருப்பினும், முதல் போட்டியில் ஆடும் லெவனில் இடம் பெறுவது அவருக்குக் கடினமாக இருக்கும் என்று தெரிகிறது.

அபிஷேக் ஷர்மா பார்முக்கு திரும்புவாரா..?

வைபவ் சூர்யவன்ஷியுடன் யார் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்குவார் என்பதும் ஒரு முக்கியமான கேள்வி. தற்போது, ​​அபிஷேக் ஷர்மாவுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் 3 போட்டிகளில் அவரால் 11 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 2026-ல் அபிஷேக்கின் செயல்பாடு எதிர்பார்த்தபடி அமையவில்லை. மேலும், அபிஷேக் சர்மா கடந்த 23 போட்டிகளில் 514 ரன்கள் எடுத்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் அபிஷேக் 6 முறை டக் அவுட் ஆகியுள்ளார். எனவே, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் அபிஷேக் சொதப்பினால், சஞ்சு ஷர்மாவுக்கு மீண்டும் வாய்ப்புகள் வழங்கலாம்.

இஷான் கிஷன் விக்கெட் கீப்பரா?

முதல் டி20 போட்டியில் இஷான் கிஷன் விக்கெட் கீப்பராகத் தொடர வாய்ப்புள்ளது. துலீப் கோப்பை பைனலில் தெற்கு மண்டலத்திற்கு எதிராக சாதனை அளவாக 350 ரன்கள் எடுத்தது இஷானின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. எனவே, சஞ்சு சாம்சன் ஆடும் லெவனில் இடம்பிடிக்கக் காத்திருக்க வேண்டியிருக்கும். மிடில் ஆர்டரில், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் துணை கேப்டன் திலக் வர்மா ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். சிவம் துபேவும் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.

நிதீஷ் குமார் ரெட்டியா அல்லது வாஷிங்டன் சுந்தரா?

டெல்லி பிட்சை கருத்தில் கொண்டு, நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தருக்கு ஸ்ரேயாஸ் ஐயர் வாய்ப்பளிக்கலாம். தொடை தசைநார் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக அணியில் இருந்து விலகியிருந்த சுந்தர், சமீபத்தில் உடற்தகுதி அனுமதி பெற்றுள்ளார். இது தவிர, இந்தப் போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவின் உடற்தகுதியும் சோதிக்கப்படலாம். ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் பும்ரா விளையாடும் முதல் டி20 போட்டியாக இது இருக்கலாம். அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் படேல் ஆகியோர் பந்துவீச்சை இந்திய அணி நம்பியிருக்கிறது.

ALSO READ: இந்தியா-ஆப்கானிஸ்தான் முதல் டி20.. மாற்றப்படுகிறதா தேதி..? டெல்லி சங்கம் விளக்கம்!

கணிக்கப்பட்ட இந்திய அணி:

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா (துணை கேப்டன்), சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்

Follow Us