AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இந்தியா – ஆப்கானிஸ்தான் முதல் டி20 போட்டிக்கு சிக்கல்… போட்டியை ஒத்திவைக்க டெல்லி போலீஸ் கோரிக்கை!

Delhi Police Seeks Rescheduling : இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் செப்டம்பர் 13, 2026 அன்று தொடங்குகிறது. முதல் டி20 போட்டியை வேறு தேதிக்கு மாற்றுமாறு டெல்லி போலீசார் டெல்லி கிரிக்கெட் சங்கமான டிடிசிஏவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியா – ஆப்கானிஸ்தான் முதல் டி20 போட்டிக்கு சிக்கல்… போட்டியை ஒத்திவைக்க டெல்லி போலீஸ் கோரிக்கை!
அருண் ஜேட்லி மைதானம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 10 Sep 2026 19:45 PM IST

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் செப்டம்பர் 13, 2026 அன்று தொடங்குகிறது. முதல் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், முதல் டி20 போட்டியை வேறு தேதிக்கு மாற்றுமாறு டெல்லி போலீசார் டெல்லி கிரிக்கெட் சங்கமான டிடிசிஏவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியா – ஆப்கானிஸ்தான் முதல் டி20 போட்டிக்கு சிக்கல்

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடர், புது டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் போட்டி வருகின்ற 2026 செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற விருக்கிறது. இந்த நிலையில் இந்தப் போட்டியை தள்ளி வைக்குமாறு டெல்லி போக்குவரத்து காவல்துறை டெல்லி கிரிக்கெட் சங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிக்க : IPL 2027: பயிற்சி முகாமில் தீவிரம் காட்டிய தோனி.. சிஎஸ்கே வீரர் கொடுத்த சூப்பர் அப்டேட்!

இதற்கு முக்கிய காரணம், டெல்லியில் நடைபெற உள்ள BRICS உச்சி மாநாடு. மாநாட்டையொட்டி பல்வேறு நாட்டு தலைவர்கள் டெல்லிக்கு வரவுள்ளனர். மேலும் விஐபிகளின் பாதுகாப்பு, போக்குவரத்து கட்டுப்பாடு, பாதை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளில் டெல்லி போலீசார் ஏற்கனவே அதிக அளவில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதே நேரத்தில் கிரிக்கெட் போட்டிக்கான கூட்ட நெரிசல் கட்டுப்பாடு, பார்க்கிங், போக்குவரத்து மாற்றம், அவசரகால வாகனங்களுக்கு வழி ஏற்படுத்துதல் போன்ற பணிகளையும் மேற்கொள்வது போலீசாருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி போலீஸின் கோரிக்கை

 

இதனால், BRICS மாநாடு மற்றும் அதுதொடர்பான போக்குவரத்து ஏற்பாடுகள் முடிந்த பிறகு, முதல் டி20 போட்டியை நடத்துமாறு டெல்லி போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் டிடிசிஏ தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் போட்டி ஒத்திவைக்கப்படுமா அல்லது திட்டமிட்டபடி செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இதையும் படிக்க : VIDEO : 47 வயதில் கெத்து காட்டும் இம்ரான் தாஹிர்.. சிபிஎல் தொடரில் உலக சாதனை

இதற்கிடையில், இந்திய அணி செப்டம்பர் 10, 2026 இன்று மாலை டெல்லிக்கு வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 11, 2026 நாளை வீரர்கள் பயிற்சியிலும் ஈடுபட உள்ளனர். மேலும், ஹர்ஷித் ராணா தொடரில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக யஷ் தாக்கூர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Follow Us