AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Vinayagar Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. வாழ்த்து மழை பொழிந்த கிரிக்கெட் வீரர்கள்!

Indian Cricket Players Wishes: இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான பேட்ஸ்மேன்கள் விராட் கோலி (Virat Kohli), அஜிங்க்யா ரஹானே, ஷிகர் தவான் மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஆகியோர் சமூக வலைதளங்களில் தங்களது கிரிக்கெட் ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Vinayagar Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. வாழ்த்து மழை பொழிந்த கிரிக்கெட் வீரர்கள்!
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 14 Sep 2026 22:20 PM IST

இந்தியா முழுவதும் இன்று அதாவது 2026 செப்டம்பர் 14ம் தேதி விநாயகர் சதுர்த்தி (Vinayagar Chaturthi 2026) கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஏராளமாக பக்தர்கள் கோயில்களுக்கு சென்று, வீட்டிலேயே விநாயகர் சிலையை வடிவமைத்து பிரார்த்தனை செய்தனர், பிள்ளையாரின் பிறப்பைக் கொண்டாடும் இந்த விழாவை முன்னிட்டு, இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான பேட்ஸ்மேன்கள் விராட் கோலி (Virat Kohli), அஜிங்க்யா ரஹானே, ஷிகர் தவான் மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஆகியோர் சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களுக்கும், இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். விராட் கோலியை தவிர்த்து, மற்ற 3 நட்சத்திர வீரர்களும் அனைத்துவிதமாக கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், தங்களது ரசிகர்களுக்கு இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களைத் தெரிவிக்க தங்களது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் பதிவிட்டிருந்தனர்.

ALSO READ: பாகிஸ்தான் பிளேயர் காலில் கோலி பிராண்ட் ஷூ.. இணையத்தில் ட்ரெண்ட் அடிக்கும் புகைப்படங்கள்!

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து:


குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தியில், ”விநாயகப் பெருமான் அறிவு, செழிப்பு மற்றும் மங்களகரமான தொடக்கங்களின் சின்னம். இந்தப் புனித விழா வழங்கும் நேர்மறையான மனப்பான்மை மற்றும் அறிவுடன் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அனைவரும் பங்கேற்க வேண்டும். அனைத்து பக்தர்களுக்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் ஆரோக்கியம் கிடைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

ALSO READ: CM விஜய் கெட்டப்பில் விநாயகர்.. செம மாஸாக செல்ஃபி எடுக்கும் ரசிகர்கள்.. வைரலாகும் ‘விஜய் விநாயகர்’ கொண்டாட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து:


பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரும் குடிமக்களுக்குத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதில், “தடைகளை வென்ற விநாயகப் பெருமானின் ஆசீர்வாதங்கள், மக்களின் வாழ்வில் புதிய உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் நிரப்பும்.நாடு தொடர்ச்சியான முன்னேற்றப் பாதையில் முன்னேற வேண்டும்” என்றார். மேலும்,புனிதமான கணேச பஞ்சரத்தினம் ஸ்தோத்திரத்தின் மந்திரங்களையும் பதிவிட்டிருந்தார்.

 

Follow Us