AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஒரே பண்டிகை… விநாயகரை வரவேற்கும் விதம் ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படியா?

Ganesh Chaturthi Celebrations: விநாயகர் சதுர்த்தி மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெவ்வேறு பாரம்பரியங்களுடன் கொண்டாடப்படுகிறது. மகாராஷ்டிராவில் பிரம்மாண்ட கொண்டாட்டங்களும், கர்நாடகாவில் கவுரி வழிபாடும், கோவாவில் இயற்கை சார்ந்த அலங்காரங்களும் சிறப்பு பெறுகின்றன. தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் கோயில்களில் பாரம்பரிய பூஜைகளுடன் கொழுக்கட்டை போன்ற நைவேத்தியங்கள் படைத்து விநாயகர் வழிபாடு செய்யப்படுகிறது.

ஒரே பண்டிகை… விநாயகரை வரவேற்கும் விதம் ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படியா?
விநாயகர் சதுர்த்திImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 12 Sep 2026 11:35 AM IST

விநாயகர் சதுர்த்தி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த பகுதி பாரம்பரியங்களுக்கு ஏற்ப வெவ்வேறு முறைகளில் கொண்டாடப்படுகிறது. மகாராஷ்டிராவில் பிரம்மாண்ட சிலைகள், அலங்கார பந்தல்கள் மற்றும் ஊர்வலங்களுடன் விழா கோலாகலமாக நடைபெறுகிறது. கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக கவுரி வழிபாடு நடைபெறுவது முக்கிய சிறப்பாகும். கோவாவில் களிமண் விநாயகர் சிலைகள் மற்றும் இயற்கை பொருட்களால் செய்யப்படும் அலங்காரங்கள் விழாவுக்கு தனிச்சிறப்பை அளிக்கின்றன. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெரிய சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் சிலை ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் கோயில்களில் எளிமையான முறையில் விநாயகர் வழிபாடு நடைபெறுவதுடன் கொழுக்கட்டை உள்ளிட்ட பாரம்பரிய நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன. மாநிலங்கள் மாறினாலும், விநாயகரை பக்தியுடன் வரவேற்று வழிபடுவது இந்த விழாவின் பொதுவான சிறப்பாக உள்ளது.

மகாராஷ்டிராவில் கோலாகல கொண்டாட்டம்

விநாயகர் சதுர்த்தி என்றாலே மகாராஷ்டிராவின் பிரம்மாண்டமான கொண்டாட்டங்கள் நினைவுக்கு வரும் வகையில், அங்கு வீதிகள் தோறும் பெரிய சிலைகள், அலங்காரப் பந்தல்கள் மற்றும் பக்தர்களின் கூட்டம் களைகட்டும். குறிப்பாக மும்பை மற்றும் புனே நகரங்களில் பொதுமக்கள் ஒன்றிணைந்து நடத்தும் விழாக்கள் சிறப்பு பெறுகின்றன. தவில், மேளதாளம், ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் விநாயகர் சிலைகள் வழிபாடு செய்யப்பட்டு பின்னர் விசர்ஜனம் செய்யப்படுகின்றன.

கர்நாடகாவில் கவுரி-விநாயகர் விழா

கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாளில் கவுரி ஹப்பா எனப்படும் கவுரி வழிபாடு நடைபெறுவது தனிச்சிறப்பாகும். இதனைத் தொடர்ந்து விநாயகரை வரவேற்று வீடுகளிலும் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. பலவகையான இலைகளைப் பயன்படுத்தி செய்யப்படும் வழிபாடு, பஜனை மற்றும் பாரம்பரிய உணவுகள் இந்த மாநிலத்தின் கொண்டாட்டத்தில் முக்கிய இடம் பெறுகின்றன.

கோவாவில் இயற்கையுடன் இணைந்த வழிபாடு

கோவாவில் விநாயகர் சதுர்த்தி ‘சவத்’ அல்லது ‘சோவத்’ என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. பல குடும்பங்கள் வீடுகளிலேயே களிமண்ணால் விநாயகர் சிலைகளை உருவாக்கி வழிபடுகின்றனர். பழங்கள், காய்கறிகள், இலைகள் மற்றும் விதைகளால் அலங்கரிக்கப்படும் ‘மடோலி’ எனப்படும் பாரம்பரிய அமைப்பு கோவா கொண்டாட்டத்தின் முக்கிய அடையாளமாக உள்ளது.

Also Read: விநாயகர் சதுர்த்தி.. பூஜையின்போது இந்த பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது!

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பிரம்மாண்டம்

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் ‘விநாயக சவிதி’ எனப்படும் இந்த விழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. வீடுகளில் மண் மற்றும் மஞ்சளால் செய்யப்பட்ட விநாயகர் வடிவங்களை வைத்து வழிபடும் பழக்கமும் காணப்படுகிறது. குறிப்பாக ஐதராபாத்தில் நடைபெறும் பிரம்மாண்ட சிலை ஊர்வலங்களும், நீர்நிலைகளில் நடைபெறும் நிமஜ்ஜன நிகழ்வுகளும் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கின்றன.

தமிழ்நாட்டில் பாரம்பரிய வழிபாடு

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி அல்லது பிள்ளையார் சதுர்த்தி பெரும்பாலும் வீடுகள் மற்றும் அருகிலுள்ள கோயில்களில் பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. மண் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்வதுடன், கொழுக்கட்டை உள்ளிட்ட பாரம்பரிய நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன. மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் விழா எளிமையான முறையில் நடைபெற்றாலும் குடும்ப வழிபாடு மற்றும் பாரம்பரிய சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

 

Follow Us