AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கணவரின் குறட்டை மனைவியின் உடல்நலனுக்கு மெல்லக் கொல்லும் ஆபத்தா?

Partner Snoring: துணையின் உரத்த குறட்டை சத்தத்தால் இரவில் தூக்கம் கலைவது, அருகில் இருப்பவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கிறது. இது காலையில் மிகுந்த சோர்வு, கவனச்சிதறல் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு தம்பதியரின் உறவையும் பாதிக்கக்கூடும். எனவே வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலமும், தேவைப்பட்டால் மருத்துவ ஆலோசனைகள் மூலமும் இதற்கு உடனடியாகத் தீர்வு காண்பது இருவரின் நல்வாழ்விற்கும் அவசியமாகும்.

கணவரின் குறட்டை மனைவியின் உடல்நலனுக்கு மெல்லக் கொல்லும் ஆபத்தா?
கோப்புப்படம் Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 12 Sep 2026 12:31 PM IST

இரவில் துணை எழுப்பும் உரத்த குறட்டை சத்தத்தால் அருகில் தூங்குபவரின் ஆழ்ந்த உறக்கம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. பெரும்பாலான வீடுகளில் இது ஒரு சாதாரண விஷயமாகக் கருதப்பட்டாலும், உண்மையில் இது பக்கத்தில் இருப்பவரின் ஆரோக்கியத்தை மெதுவாகப் சீர்குலைக்கிறது. தொடர்ச்சியாகத் தூக்கம் கலைவதால் காலையில் சோர்வு, கவனச்சிதறல், தலைவலி மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படுகின்றன. போதிய தூக்கமின்மை மூளையின் செயல்பாட்டைப் பாதித்து, மன அழுத்தம் மற்றும் மறதி போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. அத்துடன் தம்பதியரிடையே அநாவசிய மனக்கசப்பையும், உறவில் விரிசலையும் இது ஏற்படுத்தக்கூடும். உடல் எடையைக் குறைத்தல் மற்றும் படுக்கும் நிலையை மாற்றுதல் போன்ற எளிய பழக்கங்கள் குறட்டையைக் குறைக்க உதவும். இருப்பினும், இது ‘ஸ்லீப் அப்னியா’ போன்ற சுவாசப் பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம் என்பதால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

குறட்டை என்பது வெறுமனே சத்தம் மட்டுமல்ல

இரவில் உங்கள் அருகே படுத்து உறங்கும் துணை எழுப்பும் உரத்த குறட்டை சத்தத்தால் நள்ளிரவில் அடிக்கடி விழிப்பு வருகிறதா? அடுத்த நாள் காலையில் எழுந்திருக்கும்போது தலைவலி, கவனச்சிதறல் அல்லது மிகுந்த சோர்வை உணர்கிறீர்களா? பெரும்பாலான வீடுகளில் குறட்டை என்பது ஒரு சாதாரண அல்லது வேடிக்கையான விஷயமாகக் கடந்து செல்லப்படுகிறது. ஆனால், மருத்துவ வல்லுநர்களின் கூற்றுப்படி, குறட்டை விடும் நபரை விட அவருக்கு அருகில் தூங்குபவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியமே கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. சுவாசப் பாதையில் உள்ள மெ திசுக்களின் அதிர்வால் ஏற்படும் இந்த சத்தம், அருகில் இருப்பவரின் ஆழ்ந்த உறக்கத்தைச் சீர்குலைக்கிறது.

உடல் மற்றும் மன நலனில் ஏற்படும் பாதிப்புகள்

தொடர்ச்சியாக தூக்கம் கலைவது உடலின் இயல்பான சுழற்சியைப் பாதிக்கிறது. இதனால் மூளை நினைவுகளைச் சேமிக்கும் பணியை முழுமையாகச் செய்ய முடியாமல் மறதி ஏற்படக்கூடும். மேலும், மன அழுத்தம், எரிச்சல் மற்றும் உடலின் ஹார்மோன் சமநிலையின்மை போன்றவை ஏற்படுகின்றன. மது அருந்திய மறுநாள் காலையில் ஏற்படும் ‘ஹேங் ஓவர்’ (Hangover) போன்ற ஒருவித மயக்க நிலையை இரவில் தூக்கம் கெடும் நபர்கள் அனுபவிப்பதாகப் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது தம்பதியரிடையே அநாவசிய எரிச்சலையும், உறவில் விரிசலையும் ஏற்படுத்தக்கூடும்.

Also Read: குளிர்ந்த நீரில் குளிப்பவரா நீங்கள்? முதலில் இதை தெரிந்துகொள்ளுங்கள்!

தீர்வுகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள்

குறட்டை பிரச்சினையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தீர்ப்பது மிகவும் அவசியம். உடல் எடையைக் குறைத்தல், படுக்கும் நிலையை மாற்றுதல், மதுப்பழக்கத்தைக் கட்டுப்படுத்துதல் போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்கள் நல்ல பலனைத் தரும். எனினும், குறட்டை என்பது மூச்சுத்திணறல் (Sleep Apnea) போன்ற தீவிர சுவாசப் பிரச்சினையின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே, காது மூக்கு தொண்டை (ENT) நிபுணர் அல்லது தூக்கவியல் மருத்துவரை அணுகி ஆலோசனையும் சிகிச்சையும் பெறுவது இருவரின் தூக்கத்தையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

Follow Us