AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

CM விஜய் கெட்டப்பில் விநாயகர்.. செம மாஸாக செல்ஃபி எடுக்கும் ரசிகர்கள்.. வைரலாகும் ‘விஜய் விநாயகர்’ கொண்டாட்டம்!

Vinayagar Idols Designed In CM Vijay Style : சென்னை மாவட்டத்தில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யின் பல்வேறு ஸ்டைலில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் முன்பு விஜய்யின் ரசிகர்கள் செல்ஃபி எடுத்து வருகின்றனர் .

CM விஜய் கெட்டப்பில் விநாயகர்.. செம மாஸாக செல்ஃபி எடுக்கும் ரசிகர்கள்.. வைரலாகும் ‘விஜய் விநாயகர்’ கொண்டாட்டம்!
விஜய் விநாயகர் சிலைகள்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 14 Sep 2026 10:29 AM IST

தமிழக முழுவதும் கோயில்கள், வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றில் இன்று விநாயகர் சதுர்த்தி வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை மையப்படுத்தி பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சென்னை, கொருக்குப்பேட்டை பகுதியில் பல்வேறு வடிவங்களை விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கமாகும். அதன்படி, நிகழ் ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதல் அமைச்சருமான ஜோசப் விஜய் வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில், நடிகராக இருந்தபோது விஜய் நடித்த திரைப்படங்களின் ஹீரோ தோற்றங்கள் மற்றும் அரசியல் வருகையின் அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கில்லி பட விஜய் – பேரவையில் சைகை செய்த விஜய்

குறிப்பாக, கில்லி படத்தில் கபடி வீரராக நடித்திருக்கும் விஜயின் உருவத்தை மையப்படுத்தியும், சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அக்ரோஷமாக பேசுவது போன்ற பாணியிலும், தனது கையால் சைகை செய்வது போன்ற பாணியிலும் விநாயகர் சிலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வினோதமான மற்றும் கலைநயமிக்க விநாயகர் சிலைகளை பார்ப்பதற்கு கொருக்குப்பேட்டை பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்டோர் திரளாக வந்து செல்கின்றனர்.

மேலும் படிக்க: விநாயகர் சதுர்த்தி விழா.. வீட்டில் பிள்ளையார் பூஜைக்கு முன் செய்ய வேண்டிய சில ஏற்பாடுகள்

விஜய் விநாயகர் சிலைகள் என பெயர்

இந்த சிலைகளுக்கு “விஜய் விநாயகர்” என்று பெயரிட்டு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், இந்த சிலைகளை பார்க்க வரும் பொதுமக்கள் உள்ளிட்டோர் விஜய் விநாயகர் சிலைக்கு முன்னதாக செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வைரலாக பரவி வருகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் வழிபாட்டு முறைகளில் சினிமா மற்றும் அரசியல் தாக்கம் எதிரொளிப்பது பல்வேறு கருத்துக்களையும் பெற்று வருகிறது.

விஜய்யின் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தி பண்டிகை காலங்களில் சைக்கிளில் விநாயகர் வருவது போலவும், பைக்கில் வருவது போலவும் மற்றும் பல்வேறு வடிவங்களிலும் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போது முதல்வர் விஜய் மையமாக வைத்து அவர் அணிந்திருக்கும் கருப்பு, வெள்ளை நிற கோட் சூட்டை அணிந்திருப்பது போன்ற விநாயகர் சிலைகளும் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: விநாயகர் சதுர்த்தி – நாளை மெட்ரோ ரயில் சேவையில் முக்கிய மாற்றம்

Follow Us