AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விநாயகர் சதுர்த்தி – நாளை மெட்ரோ ரயில் சேவையில் முக்கிய மாற்றம்

Metro Service Update : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மெட்ரோ சேவையில் செப்டம்பர் 14, 2026 நாளை முக்கிய மாற்றம் செய்யப்பட்டு, ரயில்கள் ஞாயிற்றுக் கிழமை கால அட்டவணைபடி இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி – நாளை மெட்ரோ ரயில் சேவையில் முக்கிய மாற்றம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Sep 2026 15:35 PM IST

சென்னை, செப்டம்பர் 13 : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மெட்ரோ சேவையில் செப்டம்பர் 14, 2026 நாளை மாற்றம் செய்யப்பட்டு, ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைபடி இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர் 14, 2026 நாளை நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  நாளை மெட்ரோ ரயில் சேவையில் முக்கிய மாற்றம்

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, செப்டம்பர் 14, 2026 நாளை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை பின்வரும் நேரங்களில் இயங்கும். காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அதனைத் தொடர்ந்து இரவு 10 மணி முதல் 11 மணி வரையில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : “ஆ.ராசாவின் பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது!”.. சிபிஎம் சண்முகம் கொந்தளிப்பு!!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 14, 2026 நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நாளை அரசு விடுமுறை தினம் என்பதால், மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அட்டவனைப்படி செப்டம்பர் 14, 2026 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மெட்ரோ ரயில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இதற்கேற்ப மக்கள் தங்கள் பயண திட்டத்தை மேற்கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : மின் விநியோகச் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி.. கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை!

முன்னதாக சென்னையின் பரபரப்பான ஜார்ஜ் டவுன் பகுதியில் செப்டம்பர் 13, 2026 இன்று திருப்பதி திருக்குடை ஊர்வலம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அதன் படி, செப்டம்பர் 13, 2026 இன்று பிற்பகல் 3:00 மணி முதல் யானைக் கவுனி மற்றும் வால்டாக்ஸ் சாலை பகுதிகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் மேலும் தீவிரமாகும். எனவே, பயணிகள் சென்னை மெட்ரோ ரயிலைப் பயன்படுத்துவது சிறந்தது. பிராட்வே மற்றும் பாரிமுனை பகுதிகளில் மாநகரப் பேருந்துகள் அணிவகுத்து நிற்க வாய்ப்புள்ளது. எனவே, டிராஃபிக்கில் நிற்பதை தவிர்க்க உங்கள் பயணத்தை முன்கூட்டியே அமைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us