IND W vs SL W, Women’s Asia Cup Final highlights : ஆசியக் கோப்பையை தூக்கிய இந்திய மகளிர்..
Women's Asia Cup 2026 INDW vs SL-W Final Highlights : 2026 மகளிர் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோதின. இலங்கை மகளிர் அணிக்கு எதிரான செப்டம்பர் 13, 2026 இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Women’s Asia Cup Final Live Score Updates : 2026 மகளிர் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது இந்த இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி, இலங்கை மகளிர் அணியை 3வது முறையாக தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது. ஒருபுறம், முதல் அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மறுபுறம், இரண்டாவது அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இத்தொடரில் இரு அணிகளும் தோல்வியடையாமல் இறுதிப் போட்டிக்கு வந்திருப்பதால், எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா தொடர்ந்து 10-வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடவிருக்கும் நிலையில், இலங்கையும் 7-வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடவிருக்கிறது. இந்தியா 7 முறையும், இலங்கை ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன. இந்த நிலையில் இலங்கை மகளிர் அணிக்கு எதிரான செப்டம்பர் 13, 2026 இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
LIVE NEWS & UPDATES
-
INDW vs SL-W Final: ஆசியக் கோப்பையை தூக்கிய இந்திய மகளிர்..
2026 ஆசியக் கோப்பையில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
-
INDW vs SL-W Final: இலங்கை 100 ரன்களை கடந்தது.. தடுக்க போராடும் இலங்கை மகளிர்!
2026 மகளிர் ஆசியக் கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக 184 ரன்களை நோக்கி விளையாடும் இலங்கை மகளிர் அணி 16 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது.
-
ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்த்திய தீப்தி சர்மா
10வது ஓவரை தீப்தி சர்மா வீசினார். கேப்டன் சாமரி அத்தபட்டு மற்றும் விஷ்மி குணர்டினி ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
-
INDW vs SL-W Final: 50 ரன்களை கடந்த இலங்கை அணி.. இலக்கை துரத்தி பிடிக்குமா?
184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 60 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.
-
INDW vs SL-W Final: அதிரடி தொடக்கம்.. கடைசியில் அடுத்தடுத்து விக்கெட்கள்.. 183 ரன்கள் குவித்த இந்திய மகளிர்!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 2026 மகளிர் ஆசிய கோப்பையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.
-
INDW vs SL-W Final: தலா அரைசதம் அடித்து அவுட்டான தொடக்க ஜோடி.. 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய மகளிர்!
2026 மகளிர் ஆசியக் கோப்பையில் இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மற்றும் ஷஃபாலி தலா அரைசதம் அடித்து அவுட்டானார்கள்.
-
INDW vs SL-W Final: தொடரும் ஷஃபாலியின் அரைசத வேட்டை.. 100 ரன்களை தொட்ட இந்திய அணி!
இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஷஃபாலி வர்மா 30 பந்துகளில் 60 ரன்களை கடந்து விளையாடி வருகிறார். இதன் காரணமாக, இந்திய மகளிர் அணி 11வது ஓவரில் 100 ரன்களை கடந்தது.
-
24 பந்துகளில் அரைசதம் கடந்த ஷஃபாலி வர்மா
இந்திய அணியின் ஷஃபாலி வர்மா 24 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அசத்தினார்.
-
INDW vs SL-W Final: 7 ஓவர்கள் முடிவில் 70 ரன்களை கடந்த இந்திய மகளிர்.. திணறும் இலங்கை பந்துவீச்சாளர்கள்!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 2026 ஆசியக் கோப்பை பைனலில் இந்திய மகளிர் அணி விக்கெட் இழப்பின்றி 7 ஓவர்கள் முடிவில் 70 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.
-
INDW vs SL-W Final: 2 ஓவர்களில் 18 ரன்கள்.. இலங்கை பவுலர்களை பந்தாடும் ஸ்மிருதி – ஷபாலி!
2026 மகளிர் ஆசியக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான பைனலில் இந்திய அணிக்காக தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா 2 ஓவர்களில் 18 ரன்கள் குவித்தனர்.
-
INDW vs SL-W Final: இலங்கை மகளிர் அணியின் பிளேயிங் லெவன்..!
இலங்கை மகளிர் அணியின் பிளேயிங் லெவன்:
சாமரி அத்தபத்து (கேப்டன்), இமேஷா துலானி, விஷ்மி குணரத்ன, ஹாசினி பெரேரா, ஹர்ஷிதா சமரவிக்ரம, கவிஷா தில்ஹாரி, நிலக்ஷிகா சில்வா, கௌஷானி நுத்யங்கனா(விக்கெட் கீப்பர்), சுகந்திகா குமாரி, சாமுதி பிரபோதா, மிதாலி அயோத்தி
-
INDW vs SL-W Final: இலங்கைக்கு எதிரான பைனல்.. இந்திய மகளிர் அணியின் பிளேயிங் லெவன் இதுதான்!
இந்திய மகளிர் பிளேயிங் லெவன்:
ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஹர்மன்ப்ரீத் கவுர்(கேப்டன்), பார்தி ஃபுல்மாலி, ரிச்சா கோஷ்(விக்கெட் கீப்பர்), குணாளன் கமாலினி, தீப்தி சர்மா, பிரேமா ராவத், ஸ்ரீ சரணி, கிராந்தி கவுட், நந்தனி ஷர்மா
-
Women’s Asia Cup Final LIVE: டாஸ் வென்ற இந்திய மகளிர்.. முதலில் பேட்டிங் ஆட முடிவு..!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 2026 மகளிர் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
-
Women’s Asia Cup Final LIVE: மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டி நேரம்..!
இந்தியா – இலங்கை இறுதிப் போட்டி இன்று அதாவது 2026 செப்டம்பர் 13ம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும். மகளிர் ஆசியக் கோப்பை பட்டத்திற்காக இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டம், இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்குத் தொடங்கவுள்ளது. இது ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான மாலை நேரக் கொண்டாட்டமாக அமையும்.
-
Women’s Asia Cup 2026 Final LIVE: 7வது முறையாக பைனலில் மோதும் இந்தியா – இலங்கை..!
மகளிர் ஆசியக் கோப்பை வரலாற்றில் இந்தியாவும் இலங்கையும் 7வது முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் 2004, 2005-06, 2006, 2008, 2022 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளன. இது இவர்களது 7வது மகளிர் ஆசியக் கோப்பை இறுதி போட்டியாகும். இதுவரை, இறுதிப் போட்டியில் இந்தியா 5 முறை இலங்கையைத் தோற்கடித்துள்ளது. அதே சமயம், இலங்கை ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
-
Women’s Asia Cup 2026 Final LIVE: பைனல் போட்டியை எங்கு காணலாம்..?
2026 மகளிர் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் சேனலில் காணலாம். மேலும், சோனி லைவ் ஆப்பிலும் இப்போட்டியின் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
-
Women’s Asia Cup 2026 Final LIVE: இந்தியா – இலங்கை இதுவரை இறுதிப்போட்டியில் எப்படி..?
மகளிர் ஆசியக் கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மூன்றாவது தொடர்ச்சியான இறுதிப் போட்டியாகும். இதற்கு முன்னர், 2022 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இறுதிப் போட்டிகளில் இந்தியாவும் இலங்கையும் மோதின. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் இலங்கையும் வெற்றி பெற்றன. தற்போது, இலங்கையிடம் அடைந்த முந்தைய தோல்விக்குப் பழிவாங்க இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
Published On - Sep 13,2026 4:00 PM