IND vs AFG: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை.. தேசிய கீதத்திற்கு முன் இசைக்கப்பட்ட வந்தே மாதரம்!
IND vs AFG 1st T20: டாஸ் போடுவதற்கு முந்தைய முழு விழா நடைபெற நீண்ட நேரம் நீடித்தது. முதலில் 'வந்தே மாதரம்' இசைக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து 'ஜன கண மன' என்ற தேசிய கீதம் இசைக்கப்பட்டது. முதல் முறையாகப் புதிய முறை செயல்படுத்தப்பட்டதால், ஆட்டம் திட்டமிடப்பட்ட நேரத்தை விடச் சுமார் நான்கு நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது.
டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு (IND vs AFG) இடையே நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் போட்டி, நேற்று அதாவது 2026 செப்டம்பர் 13ம் தேதி ஒரு தனித்துவமான முறையில் தொடங்கியது. ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு முன்பு, ‘ஜன கண மன’ என்ற இந்தியாவின் (Indian Cricket Team) தேசிய கீதத்திற்கு முன்னதாக ‘வந்தே மாதரம்’ இசைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். மத்திய அரசின் உத்தரவின் பேரில் புதிய ஏற்பாட்டின் காரணமாக, டாஸ் போடுவதற்கு முந்தைய விழா வழக்கத்தை விட அதிக நேரம் நீடித்ததுடன், போட்டியும் திட்டமிடப்பட்ட நேரத்தை விட சுமார் நான்கு நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை துரத்திய இந்திய அணி
ALSO READ: இந்திய அணியினருக்கு 5 ஸ்டார் ஹோட்டல் இல்லை.. ஸ்ரிட்டாக சொன்ன பிசிசிஐ!




முதல் முறையாக இசைக்கப்பட்ட ‘வந்தே மாதரம்’:
Vande Mataram played before the match. pic.twitter.com/SCDdiP0qtR
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 13, 2026
போட்டிக்கு முந்தைய விழாவின் போது, தேசிய கீதத்திற்கு முன்பு ‘வந்தே மாதரம்’ இசைக்கப்பட்டதைக் கண்டு ஸ்டேடியத்தில் இருந்த கூட்டத்தினரும், பத்திரிக்கையாளர் அறையில் இருந்த சிலரும் ஆச்சரியமடைந்தனர். இந்தியாவில் ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு முன்பு இத்தகைய ஏற்பாடு செயல்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும். ‘வந்தே மாதரம்’ பாடலைத் தொடர்ந்து, ‘ஜன கண மன’ என்ற தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
ALSO READ: 10 விக்கெட்டுகள்.. கெத்தான சாதனை படைத்த குல்தீப் யாதவ்.. என்ன மேட்ச் தெரியுமா?
ஜன கண மன பாடப்பட்டதா?
THIS IS JASPRIT BUMRAH HERITAGE. 🔥🇮🇳 pic.twitter.com/r5tmEk9qnL
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 13, 2026
டாஸ் போடுவதற்கு முந்தைய முழு விழா நடைபெற நீண்ட நேரம் நீடித்தது. முதலில் ‘வந்தே மாதரம்’ இசைக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து ‘ஜன கண மன’ என்ற தேசிய கீதம் இசைக்கப்பட்டது. முதல் முறையாகப் புதிய முறை செயல்படுத்தப்பட்டதால், ஆட்டம் திட்டமிடப்பட்ட நேரத்தை விடச் சுமார் நான்கு நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்பு தேசிய கீதத்தை இசைப்பது இந்தியர்களின் ஒரு பாரம்பரிய முறையாகும். இருப்பினும், இந்த முறை, ‘வந்தே மாதரம்’ பாடலும் தேசிய கீதத்திற்கு முன்பாகச் சேர்க்கப்பட்டு இசைக்கப்பட்டது. இந்திய சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.