IND vs AFG: அபிஷேக் சர்மாவின் அடாவடி ஆட்டம்.. ஆப்கானிஸ்தானை ஆஃப் செய்த இந்தியா!
IND vs AFG 1st T20: அர்ஷ்தீப் சிங்கின் அபாயகரமான பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 156 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் மூன்றாவது ஓவரில், 2 பவுண்டரிகளின் உதவியுடன் 8 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி (Indian Cricket Team), போட்டியை நடத்திய ஆப்கானிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி வெறும் 32 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி (Afganistan Cricket Team) இந்தியாவிற்கு 157 ரன்கள் இலக்கை நிர்ணயித்திருந்தது. அதனை இந்திய அணி 14வது ஓவரில் எட்டியது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
ALSO READ: 6வது அணியாக நேபாளம் தகுதி.. 2027 ஆசியக் கோப்பைக்கான அணிகள் தயார்!




சஞ்சு சாம்சன் மீண்டும் ஏமாற்றம்:
A convincing 7️⃣-wicket win in the series opener 💙
Positive start for #TeamIndia in the Friendship Cup 👏
Scorecard ▶️ https://t.co/Wacwj3tM4l#AFGvIND pic.twitter.com/jNer7opNyN
— BCCI (@BCCI) September 13, 2026
அர்ஷ்தீப் சிங்கின் அபாயகரமான பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 156 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் மூன்றாவது ஓவரில், 2 பவுண்டரிகளின் உதவியுடன் 8 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும், அபிஷேக் ஷர்மாவின் பேட்டிங்கை யாராலும் தடுக்க முடியவில்லை. அவர் களத்தின் அனைத்து பக்கத்திலும் ரன்களைக் குவித்தார். அபிஷேக் தனது அரைசதத்தை வெறும் 22 பந்துகளில் எட்டினார். இஷான் கிஷன் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்தியா பவர்பிளேயில், அதாவது 6 ஓவர்களில், 82 ரன்கள் எடுத்தது.
அபிஷேக் சர்மா சதம் மிஸ்:
அபிஷேக் சர்மா வெறும் 32 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உதவியுடன் 82 ரன்கள் எடுத்த பிறகு பெவிலியன் திரும்பினார். அதாவது, அபிஷேக் பவுண்டரிகள் மூலம் 70 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷன் 33 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடித்து 42 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 5 பந்துகளில் 8 ரன்களுடனும், துணை கேப்டன் திலக் வர்மா 4 பந்துகளில் 3 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ALSO READ: சஞ்சு இன்.. சூர்யவன்ஷி அவுட்.. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய பிளேயிங் லெவன்!
முன்னதாக, அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் நான்கு ஓவர்களில் 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கிடையில், வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஆப்கானிஸ்தான் அணிக்காக அஸ்மத்துல்லா உமர்சாய் ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் எடுத்து அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். இரண்டாவது டி20 போட்டி வருகின்ற 2026 செப்டம்பர் 15 ஆம் தேதி அதே மைதானத்தில் நடைபெறும். இந்தத் தொடரை ஆப்கானிஸ்தான் நடத்துகிறது.