AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Asia Cup 2027: 6வது அணியாக நேபாளம் தகுதி.. 2027 ஆசியக் கோப்பைக்கான அணிகள் தயார்!

Nepal Cricket Team: ஏசிசி பிரீமியர் கோப்பையை வென்ற நேபாளம், ஆசியக் கோப்பைக்குத் தகுதி பெற்ற 6வது மற்றும் இறுதி அணியாகியுள்ளது. இந்த முறை ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டி வடிவத்தில் நடைபெறுவதால், 6 அணிகள் மட்டுமே பங்கேற்கின்றன. கடந்த 2026 ஆசியக் கோப்பையில் 8 அணிகள் பங்கேற்றன. இருப்பினும், அதன் கடைசிப் பதிப்பு டி20 வடிவத்தில் நடைபெற்றது.

Asia Cup 2027: 6வது அணியாக நேபாளம் தகுதி.. 2027 ஆசியக் கோப்பைக்கான அணிகள் தயார்!
நேபாள கிரிக்கெட் அணி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Sep 2026 21:36 PM IST

மலேசியாவின் பயுமாஸ் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 2026 ஏசிசி ஆடவர் பிரீமியர் கோப்பை இறுதிப் போட்டியில், ஐக்கிய அரபு அமீரகத்தை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், நேபாள கிரிக்கெட் அணி (Nepal Cricket Team) 2027-ல் நடைபெறவிருக்கும் ஆசியக் கோப்பைக்கு அதிகாரப்பூர்வமாகத் தகுதி பெற்றுள்ளது . நேபாளத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய தொடக்க ஆட்டக்காரர் ஆசிப் ஷேக், ஒரு சிறப்பான சதத்தை அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்த வெற்றியின் மூலம், சந்தீப் லாமிச்சானே தலைமையிலான நேபாள அணி, வருகின்ற 2027ம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பையில் (Asia Cup) பங்கேற்கும் 6-வது அணியாக உருவெடுத்துள்ளது.

ALSO READ: இது எங்களுக்கு முதல் படி.. இந்தியாவிற்கு எதிரான டி20 குறித்து ஜப்பான் கேப்டன் பெருமிதம்!

2027 ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றுள்ள 6 அணிகள்

ஏசிசி பிரீமியர் கோப்பையை வென்ற நேபாளம், ஆசியக் கோப்பைக்குத் தகுதி பெற்ற 6வது மற்றும் இறுதி அணியாகியுள்ளது. இந்த முறை ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டி வடிவத்தில் நடைபெறுவதால், 6 அணிகள் மட்டுமே பங்கேற்கின்றன. கடந்த 2026 ஆசியக் கோப்பையில் 8 அணிகள் பங்கேற்றன. இருப்பினும், அதன் கடைசிப் பதிப்பு டி20 வடிவத்தில் நடைபெற்றது. நடப்புச் சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் போட்டியை நடத்தும் வங்கதேசம் ஆகியவை இத்தொடருக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ள நிலையில், நேபாளமும் 6வது அணியாக நுழைந்துள்ளது.

2023-க்குப் பிறகு நேபாளம் தகுதி:

நேபாள கிரிக்கெட் வரலாற்றில் ஆசிய கோப்பைத் தொடரில் அந்நிறுவனம் பங்கேற்பது இது இரண்டாவது முறையாகும். 2023ம் ஆண்டு ஆசியக் கோப்பையில் நேபாளம் அறிமுகமானது. இந்தத் தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றிருந்த நேபாளம், ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. தற்போது, ​​முன்னணி அணிகளுக்குக் கடுமையான போட்டியை அளிக்கும் நோக்குடன் 2027ம் ஆண்டு நேபாளம் களமிறங்குகிறது.

ALSO READ: தொடர்ந்து 3வது முறையாக பைனலில் மோதல்.. இந்தியாவா? இலங்கையா? யாருக்கு சாதகம்?

10 அணிகளைத் தோற்கடித்து நேபாளம் சாம்பியன்:

2026 ஆகஸ்ட் 30 முதல் 2026 செப்டம்பர் 12 வரை நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா, குவைத், ஹாங்காங், பஹ்ரைன், ஓமன், கத்தார், சவூதி அரேபியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய 10 நாடுகளுக்கு இடையே இந்தப் போட்டித்தொடர் நடைபெற்றது. இறுதியில் நேபாளம் கோப்பையை வென்றது.

Follow Us