IND vs AFG: வைபவ் சூர்யவன்ஷியை அணியிலிருந்து நீக்குங்கள்.. முன்னாள் இந்திய வீரர் கருத்தால் பரபரப்பு!
Vaibhav Sooryavanshi Playing XI: சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள வைபவ் சூர்யவன்ஷி 32.16 சராசரியில் 193 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 2 சதங்களையும் அடித்துள்ளதால், ரசிகர்களிடையே அவரது செல்வாக்கு அதிகரித்துள்ளது. இருப்பினும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் வைபவை நீக்கிவிட்டு, சஞ்சு சாம்சனுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மேன் அஜிங்க்யா ரஹானே கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் (IND vs AFG) அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் வருகின்ற 2026 செப்டம்பர் 13ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா இல்லையா என்பது குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் (Indian Cricket Team) முன்னாள் வீரரான ரஹானே, தற்போதைக்கு வைபவ் சூர்யவன்ஷியை அணியிலிருந்து நீக்கிவிட்டு, அனுபவமிக்க வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோரை முதல் 3 இடங்களில் விளையாட வைக்க வேண்டும் என்பது குறித்தும் தெளிவாக பேசியுள்ளார்.
ALSO READ: இந்தியா-ஆப்கானிஸ்தான் முதல் டி20.. மாற்றப்படுகிறதா தேதி..? டெல்லி சங்கம் விளக்கம்!
ரஹானே கூறியது என்ன?
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வருகின்ற 2026 செப்டம்பர் 13 அன்று நடைபெற உள்ளது. தொடருக்கு முன்பாகவே ஆடும் லெவன் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. மேலும், வைபவ் சூர்யவன்ஷியின் பெயரும் இந்தப் பேச்சில் அடிபடுகிறது. வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கினார்.




சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள வைபவ் சூர்யவன்ஷி 32.16 சராசரியில் 193 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 2 சதங்களையும் அடித்துள்ளதால், ரசிகர்களிடையே அவரது செல்வாக்கு அதிகரித்துள்ளது. இருப்பினும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் வைபவை நீக்கிவிட்டு, சஞ்சு சாம்சனுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மேன் அஜிங்க்யா ரஹானே கூறியுள்ளார். மேலும், சாம்சன் அபிஷேக் ஷர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் விளையாடிய முதல் 3 பேட்ஸ்மேன்களுக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ரஹானே தனது யூடியூப் சேனலில் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய ரஹானே, “ சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் போன்ற வீரர்கள் அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளனர், அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். எதிர்காலத்திலும் வைபவ் சூர்யவன்ஷிக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், தற்போதைக்கு அணி அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று ரஹானே கூறியுள்ளார்.
ALSO READ: திரும்பிய சஞ்சு சாம்சன்.. பார்ம் அவுட்டில் அபிஷேக்.. இந்திய பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?
முதல் 2 போட்டிகளுக்கு இந்திய அணி நிர்வாகம் வைபவ் சூர்யவன்ஷியை பெஞ்சில் அமர வைக்குமா இல்லையா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி. தகவல்களின்படி, வைபவ் சூர்யவன்ஷியை ஒரு மாற்று தொடக்க ஆட்டக்காரராக வைக்கப்பட்டு, மூன்றாவது போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.