ஒரே பிரசவத்தில் 17 குட்டிகளை ஈன்ற சிப்பிப்பாறை நாய்.. திண்டுக்கலில் சுவாரஸ்யம்.. ஆர்வமுடன் பார்த்துச் செல்லும் பொதுமக்கள்!
Chippiparai Dog Gave Birth To 17 Puppies | திண்டுக்கலில் சந்திரசேகர் என்பவர் சிப்பிப்பாறை நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அது கர்ப்பமாக இருந்த நிலையில், ஒரே பிரசவத்தில் 17 குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
திண்டுக்கல், செப்டம்பர் 12 : திண்டுக்கல் (Dindigul) மாவட்டத்தில் உள்ள நத்தம் ரோட்டில் அமைந்துள்ள அபிராமி நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் தனது வீட்டில் சிப்பிப்பாறை ரக, பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். கர்ப்பமாக இருந்த இந்த நாய், நேற்று (செப்டம்பர் 11, 2026) மொத்தம் 17 குட்டிகளை ஈன்றுள்ளது. ஒரே பிரசவத்தில் நாய், இத்தனை குட்டிகளை ஈன்றுள்ளது அந்த பகுதி மக்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒரே பிரசவத்தில் 17 குட்டிகளை ஈன்ற நாய்
சந்திரசேகர் பாசத்துடன் வளர்த்து வரும் அந்த சிப்பிப்பாறை கர்ப்பமாக இருந்த நிலையில், அது குட்டிகளை ஈன்றுள்ளது. அதாவது, வழக்கமாக நாய்கள் மூன்று அல்லது 4 குட்டிகளை ஈன்றும். சில சமயங்களில் 6 முதல் 7 குட்டிகளை கூட ஈன்றும். ஆனால், சந்திரசேகரின் நாயோ, ஒரே பிரசவத்தில் மொத்தம் 17 குட்டிகளை ஈன்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் மிகவும் ஆர்வத்துடன் அந்த நாயையும், அதன் குட்டிகளையும் பார்த்து செல்கின்றனர்.
இதையும் படிங்க : திமுகவின் ஒட்டுண்ணியாக இருந்த காங்கிரஸ்.. பிரதமரை விமர்சிக்க என்ன தகுதி உள்ளது.. நயினார் நாகேந்திரன் நாக்-அவுட் கேள்வி!




மகிழ்ச்சியுடன் பேசிய பராமரிப்பாளர் சந்திரசேகர்
இது குறித்து பேசிய சந்திரசேகர், கொரோனா ஊரடங்கின் போது சிறுமலை அடிவாரத்தில் பராமரிப்பு இல்லாமல் சுற்றித்திரிந்த சிப்பிப்பாறை இன நாயை எடுத்து வளர்த்தேன். இது 2023 ஆம் ஆண்டு 11 குட்டிகளை ஈன்றது. பிறகு மீண்டும் கருவுற்ற நிலையில், இந்த முறை 17 குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த ரக நாய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு நாய் குட்டிகளி வழங்க உள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவா? திடீர் நிபந்தனை விதித்த இந்திய கம்யூனிஸ்ட்? என்ன அது!
அனைத்து நாய் குட்டிகளும் நலமுடன் உள்ளன
இந்த நாய் குட்டிகளை பரிசோதனை செய்த மருத்துவர், சிப்பிப்பாறை இன நாய்கள் அதிகப்படியாக 4 முதல் 8 குட்டிகள் வரை ஈன்றும். இது 17 குட்டிகளை ஈன்றுள்ளது என்பது ஆச்சர்யம் தான். நாய் மற்றும் குட்டிகள் அனைத்தும் ஆரோக்கியமாக உள்ளன என அவர் கூறியுள்ளார்.