AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

லண்டனில் மிக உயரமான ஹோட்டலில் தங்கும் முதல்வர் விஜய் – ஒருநாள் வாடகை இவ்வளவா?

CM Vijay’s London Visit : முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் செப்டம்பர் 10, 2026 நேற்றிரவு லண்டன் புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் லண்டனில் முதல்வர் தங்கியிருக்கும் ஹோட்டல் குறித்தும் அதன் ஒருநாள் வாடகை உள்ளிட்ட விவரங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

லண்டனில் மிக உயரமான ஹோட்டலில் தங்கும் முதல்வர் விஜய் – ஒருநாள் வாடகை இவ்வளவா?
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Sep 2026 20:07 PM IST

சென்னை, செப்டம்பர் 11 : முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் செப்டம்பர் 10, 2026 நேற்றிரவு லண்டன் புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் அவருக்கு லண்டனில் தமிழர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் செப்டம்பர் 12, 2026 லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்கும் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை கொடியசைத்து துவங்கி வைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இருவரது ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

லண்டனில் மிக உயரமான ஹோட்டலில் தங்கும் முதல்வர் விஜய்

இதற்கிடையில் முதல்வர் விஜய் தங்கியிருக்கும் ஹோட்டல் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி அவர் லண்டனில் மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கிறாராம். தி ஷர்ட் என்ற மிக உயரமான நட்சத்திர விடுதியில் முதல்வர் விஜய் தங்கியுள்ளாராம். இது லண்டனில் மிக உயரமாக நட்சத்திர விடுதி என்பதோடு மட்டுமல்லாமல், ஐரோப்பாவிலேயே மிக உயரமான கட்டங்களின் வரிசையில் 7வது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் 34 தளங்களைக் கொண்டிருக்கிறது.

இதையும் படிக்க : தவெக கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும்.. கம்யூனிஸ்ட் கட்சியை டார்கெட் செய்கிறாரா… கே.ஏ. செங்கோட்டையன்!

இதன் சிற்பபு என்னவென்றால் இந்த கட்டிடத்தில் இருந்து பார்த்தால் ஒட்டுமொத்த லண்டனையும் பார்க்க முடியும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஹோட்டலை கடந்து செல்லும் விமானத்தில் இருந்தும் இந்த ஹோட்டலை பார்க்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. இந்த ஹோட்டலில் தங்கும் அறைகள் மட்டுமல்லாமல், உலகின் பல உணவு முறைகள் விற்பனையாகும் உணவகங்கள், திருமண அரங்கம், மிகப்பெரிய நிறுவனங்கள் சந்திப்புகளை நடத்துவதற்கான அரங்குகள் என பல அம்சங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக உலகின் மிக உயரமான இடத்தில் இருந்து லண்டனை ரசித்து பார்த்தபடி சாப்பிடும்படி நீச்சல் குளத்துடன் கூடிய உணவகம் இதன் தனிச்சிறப்பு என கூறப்படுகிறது. மேலும் இதில் திரையரங்கமும் உள்ளதாக கூறப்படுகிறது. இங்கு தங்க நாள் ஒன்றுக்கு இந்திய மதிப்பில் ரூ.60,000 முதல் ரூ.1,60,000 வரை ஆகும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க : சென்னை – மதுரைக்கு ரூ.ரூ.19,761 கட்டணமா? விநாயகர் சதுர்த்தி விடுமுறையால் எகிறிய விமான கட்டணம்

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்வர் விஜய் மேற்கொள்ளும் முதல் அரசு முறைப்பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. லண்டனில் 6 நாட்கள் தங்கியிருக்கும் அவர் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்லால் புகழ்பெற்ற கார் பந்தய மைதானமான சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’ மைதானத்தை பார்வையிட்டு கார் ரேஸையும் துவங்கி வைக்கிறார்.

இது தொடர்பாக மைக்கேலின் லே மான்ஸ் கப் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், இந்த வார இறுதியில் செப்டம்பர் 12, 2026 சனிக்கிழமை இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோனில் நடைபெற உள்ள மைக்கேலின் லே மான்ஸ் கப் ( Michelin Le Mans Cup) கார் பந்தயத்தில், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இந்த பந்தயத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கும் வகையில், 44 கார்கள் கொண்ட கிரிட் முன்பு முதல்வர் விஜய் பச்சைக் கொடியை அசைக்க உள்ளதாக Michelin Le Mans Cup தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Follow Us