AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னை – மதுரைக்கு ரூ.ரூ.19,761 கட்டணமா? விநாயகர் சதுர்த்தி விடுமுறையால் எகிறிய விமான கட்டணம்

Flight Ticket Prices Surge : விநாயகர் சதுர்த்தி மற்றும் சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை வருவதால் மக்கள் தங்கள் சொந்தர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். ஏற்கனவே ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகரித்த நிலையில் விமான கட்டணமும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

சென்னை – மதுரைக்கு ரூ.ரூ.19,761 கட்டணமா? விநாயகர் சதுர்த்தி விடுமுறையால் எகிறிய விமான கட்டணம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Sep 2026 18:29 PM IST

சென்னை, செப்டம்பர் 11 : விநாயகர் சதுர்த்தி மற்றும் சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை வருவதால் மக்கள் தங்கள் சொந்தர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து தங்கள் சொந்தர்களில் பண்டிகைகளை கொண்டாடும் நோக்கில் அதிகளவிலான மக்கள் பயணிப்பது வழக்கம். இதனைப் பயன்படுத்திக்கொண்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் விமான நிறுவனங்கள் பயண கட்டணத்தை பல மடங்கு உயர்த்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் .

விநாயகர் சதுர்த்தி விடுமுறையால் எகிறிய விமான கட்டணம்

ஏற்கனவே ரயில் மற்றும் அரசு பேருந்துகளில் முன்பதிவு முடிந்துவிட்ட நிலையில் அரசு அறிவித்த சிறப்பு பேருந்துகளிலும் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. 8 முதல் 10 மணி நேரம் பயணம் செய்பவர்கள் கூட்டநெரிசலில் பயணிப்பது சிரமமான காரியம். இதனைப்பயன்படுத்திக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் டிக்கெட் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விட்டார்கள்.

இதையும் படிக்க : Tamil Nadu Weather Alert: இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை

இந்த நிலையில் சற்று விலை உயர்வு என்றாலும் வசதியாகவும் விரைவாகவும் பயணிக்க முடியும் என்று விமான டிக்கெட்டை முயற்சித்தவர்களுக்கு காத்திருந்ததது அதிர்ச்சி. சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்துக்கு வழக்கமான கட்டணம் ரூ.6,991 என்று இருக்கும் நிலையில், செப்டம்பர் 11, 2026 இன்று ரூ.17,153 வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போல சென்னையில் இருந்து மதுரைக்கு வழக்கமாக ரூ.5393 ஆக இருக்கும் கட்டணம், செப்டம்பர் 11, 2026 இன்று ரூ.19,761 வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. .

சென்னையில் இருந்து திருச்சிக்கு வழக்கமாக விமான கட்டணம் ரூ.4,646 என்று இருக்கும் நிலையில் செப்டம்பர் 11, 2026 ரூ.14,673 ஆகவும், சென்னையில் இருந்து கோவைக்கு ரூ.4966-ல் இருந்து ரூ.16496 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும், சென்னையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடிய விமானங்களிலும் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

மேலும், சென்னையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடிய விமானங்களிலும் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. உதாரணமாக, சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு விமானக் கட்டணம் ரூ.3,801 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.17,993 வரை உயர்ந்துள்ளது. சென்னை–ஹைதராபாத் வழித்தடத்தில் ரூ.4,467 ஆக இருந்த கட்டணம், இன்று ரூ.18,207 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல, நீண்டதூர விமானப் பயணத்துக்கான கட்டணமும் கணிசமாக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க : Solomon Pappaiah : பேராசியர்.. நடுவர்.. நடிகர்.. சாலமன் பாப்பையா கடந்து வந்த பாதை!

இந்த திடீர் கட்டண உயர்வு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகை நாட்களை மக்கள் தங்கள் சொந்த ஊரில் கொண்டாட விரும்பும் நிலையில் தேவையை புரிந்துகொண்டு அவர்கள் மீது கூடுதல் கட்டணத்தை திணிப்பது கண்டனத்துக்குரியது என தெரிவித்து வருகின்றனர்.

Follow Us