Solomon Pappaiah : பேராசியர்.. நடுவர்.. நடிகர்.. சாலமன் பாப்பையா கடந்து வந்த பாதை!
Pattimandram Moderator Solomon Pappaiah : பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா உடல் நலக்குறைவால் காலமானார். இவர் யார், இவர் கடந்து வந்த பாதை என்ன என்ற முழு விவரத்தை இந்தப் பதிவில் விரிவாக படித்த பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அன்பு பெரியோர்களே… அருமை தாய்மார்களே என்ற அருமையான வரிகளுக்கு சொந்தக்காரரான பட்டிமன்ற நடுவரும், தமிழ் அறிஞருமான சாலமன் பாப்பையா வயது முதிர்வு காரணமாக இன்று வெள்ளிக்கிழமை மதுரையில் காலமானார். இவர் யார்… இவர் கடந்து வந்த பாதை என்ன என்பதை இந்த பதிவில் சற்று விரிவாக பார்க்கலாம். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் கடந்த 1936- ஆம் ஆண்டு பிப்ரவரி 22- ஆம் தேதி சுந்தரம்- பாக்கியம் தம்பதிக்கு 9- ஆவது குழந்தையாக பிறந்தார் சாலமன் பாப்பையா. இவருக்கு ஜெயாபாய் என்ற மனைவி இருந்தார். விமலா சாலமன் என்ற மகளும், தியாக மூர்த்தி என்ற மகனும் உள்ளனர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற சாலமன் பாப்பையா தனது குரு பேராசிரியர் ஜோதி முத்துவின் வழிகாட்டுதலின்படி இளம் வயதிலேயே மேடைகளில் பேசத் தொடங்கினார்.
விரிவுரையாளர்- நடிகர்- நடுவர் என பன்முக தன்மையுடையவர்
தொடர்ந்து, அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றிய சாலமன் பாப்பையா கல்லூரி நாடகங்களையும் இயக்கியுள்ளார். திருக்குறளுக்கு உரை எழுதியுள்ள சாலமன் பாப்பையா திருக்குறள் செம்மல் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். திருக்குறள் கழகத் தலைவர், மதுரை கம்பன் கழக தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். பேராசிரியராகவும், பட்டிமன்ற நடுவராகவும் பல்வேறு மேடைகளில் பேசி அலங்கரித்துள்ளார். சினிமாவையும் விட்டு வைக்காமல் நடித்து தூள் கிளப்பியுள்ளார்.
மேலும் படிக்க: மதுரைக்கு ரூ.4000, நெல்லைக்கு ரூ. 3,500.. பன்மடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்.. கடும் அதிருப்தியில் பொதுமக்கள்..




“அன்பு பெரியோர்களே அருமை தாய்மார்களை” என்ற சொல்லுக்கு சொந்தக்காரர்
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட படங்களில் பேராசிரியர் சாலமன் பாப்பையா நடித்து கலக்கியுள்ளார். தமிழ் மீது தீராத காதல் கொண்டவர் சாலமன் பாப்பையா. “அன்பு பெரியோர்களே அருமை தாய்மார்களே” என்ற சாலமன் பாப்பையாவின் சொல்லாடல் மிகவும் பிரபலம் வாய்ந்தது. 7000- க்கும் அதிகமான பட்டிமன்றங்களில் பேசியவர். அதிலும் பெரும்பாலும் நடுவராக இருந்துள்ளார். சமுதாயம், குடும்பப் பிரச்சனை சார்ந்த தலைப்புகளை பட்டிமன்றங்களில் கையாண்டவர்.
விருதுகளை அள்ளிய சாலமன் பாப்பையா
பத்மஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். சாலமன் பாப்பையாவின் பணிகளை பாராட்டி கடந்த 2021- ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. கடந்த 2000- ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சாலமன் பாப்பையாவுக்கு கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்து. முத்தமிழறிஞர் தமிழறிஞர் சொல்வேந்தர் நகைச்சுவை நாவலர் இயர் செல்வம் பட்டிமன்ற பேரரசு ஆகிய பெயர்களை பெற்றுள்ளார்.
மேலும் படிக்க: அன்பு தாய்மார்களே!… பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார் – ரசிகர்கள் சோகம்