நெருங்கும் இடைத்தேர்தல்.. வெற்றிக் கொடி நாட்டும் முனைப்பில் தவெக.. பாமகவுக்கு ரகசிய தூது விட்ட விஜய்.. பின்னணி என்ன!
TVK Seek PMK Support : மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவை கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ரகசிய தூது விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்துள்ளது. இந்த தேர்தலானது அக்டோபர் 6- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில், திமுக, அதிமுக, தவெக தரப்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அத்துடன், தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஆதரவு கோரி கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்த வகையில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, அமுமுக, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகளிடம் அதிமுக தலைமை ஆதரவு கோரி உள்ளது.
பாமகவிடம் ஆதரவு கோரி தவெக ரகசிய தூது
இதற்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இதே போல, தனது கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்களை அதிமுக தலைமை தற்போது வரை சந்திக்கவில்லை. அவர்களை, விரைவில் அதிமுக தரப்பினர் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாமகவுக்கு தவெக பரப்பு ரகசிய தூது விட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் படிக்க: இடைத்தேர்தலில் களமிறங்கும் தளபதியின் சிங்கப்பெண்கள்.. மரகதம் குமரவேல்- சத்தியபாமா குறித்த பின்னணி!




வன்னியர் சமுதாக மக்கள் வாக்கை குறி வைக்கும் தவெக
அதில், மதுராந்தகம் தொகுதியில் வன்னியர் சமுதாய மக்கள் அதிக அளவு இருக்கும் நிலையில், அவர்களின் வாக்குகளை பெரும் வகையில் பாமகவுக்கு தூது அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. இதில், பாமக தலைவர் அன்புமணி அதிமுகவுக்கு ஆதரவாக இருந்து வரும் நிலையில், அவரது மனைவியும், எம்எல்ஏவுமான சௌமியா அன்புமணி தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்ற மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இடைத்தேர்தல் அரசியல் களத்தில் பாமகவின் முடிவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பாமகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்
தற்போதைய சூழ்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் அவரது மனைவி சௌமியா நிலைபாட்டால் கட்சியில் இக்கட்டான சூழல் நிலவி வருவதாக கூறப்படுகிறது. அதை வேளையில், தவெக அரசின் நடவடிக்கைகளை பாமக தலைவர் அன்புமணி சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால், தவெகவிடம் இருந்து விலகியும், அதிமுகவுடன் நெருக்கமாகவும் இருப்பதாகவே அவரது செயல்பாடுகள் தெரிகிறது. இருந்தாலும், பாமகவின் நிலைப்பாடு என்ன என்பது விரைவில் தெரியவரும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க: 2 தொகுதி இடைத்தேர்தல்.. திமுக-அதிமுக-தவெக மும்முனை போட்டி.. யார் வசம் செல்கிறது மதுராந்தகம்- தாராபுரம்!