செப்.14-க்கு பிறகு உதவித்தொகைகள் வழங்கப்படும்.. அமைச்சர் செங்கோட்டையன் உறுதி!
Minister Sengottaiyan Press Meet | அமைச்சர் செங்கோட்டையன் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், செப்டம்பர் 14, 2026-க்கு பிறகு உதவித்தொகைகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அது குறித்து அமைச்சர் என்ன கூறியுள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தஞ்சாவூர், செப்டம்பர் 12 : 19.27 லட்சம் பேருக்கு செப்டம்பர் 14, 2026-க்கு பிறகு உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் (Minister Sengottaiyan) தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் (Tanjore) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (செப்டம்பர் 11, 2026) செய்தியாளர்களை சந்தித்த அவர், இது குறித்து சில முக்கிய தகவல்களை வெளியிட்டார். இந்த நிலையில், உதவித்தொகைகள் வழங்குவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் என்ன கூறியுள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
35 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு மாதம் தோறும் உதவித்தொகை
தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 23 மண்டலங்களாக புயல் வர இருக்கிறது. அதில் 3 மண்டல் புயல்கள் பெரும் வெள்ளத்தை உருவாக்கும் நிலை உள்ளது. இது எல் நினோ நிபுணர் குழு கொடுத்த பட்டியல் ஆகும். சமூல நல திட்டத்தின் அடிப்படையில் இதுவரை சுமார் 35 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு ஒவ்வொரு மாதமும் உதவித்தொகையாக ரூ.1,000 முதல் ரூ.1,500 வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : எனது அழைப்பை ஏற்று… முதல்வர் விஜய் லண்டன் பயணம் குறித்து அஜித் பேட்டி




இந்த மாதம் 14 ஆம் தேதிக்கு பிறகு வழங்கப்படும்
அந்த வகையில் செப்டம்பர் மாதம் வழங்க வேண்டிய தொகை, சுமார் 19 லட்சத்து 27 ஆயிரம் பேருக்கு வழங்க தாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்கான பணிகளை மேற்கொள்ள மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. செப்டம்பர் 14, 2026 வரையில் விழாக்கள் உள்ளன. இதன் காரணமாக மத்திய அரசு, அந்த தேதிக்கு பிறகு மத்திய அரசு அந்த அந்த துறைகளுக்கு நிதி வழங்க உள்ளது.
இதையும் படிங்க : செங்கல்பட்டில் 14-ஆவது மாடியிலிருந்து குதித்த மருத்துவ மாணவர்.. நொடியில் பிரிந்த உயர்.. இதற்காகவா இந்த விபரீத முடிவு!
அதற்கான தொகைகளை தமிழக அரசு உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு, அதற்கான பணிகளை நாங்களும் மேற்கொண்டு வருகிறோம். எனவே, நிதி வருமா, நிறுத்திவிட்டார்களா என்ற அச்சம் எதுவும் தேவையில்லை. செப்டம்பர் 14, 2026-க்கு பிறகு உரியவர்களுக்கு அந்த தொகை வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.