AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“இடைத்தேர்தலில் 2-வது இடமாவது திமுகவுக்கு கிடைக்குமா?”.. மாணிக்கம் தாகூர் கிண்டல்!

Manickam Tagore Comments On DMK: வரவிருக்கும் தேர்தலில் திமுக முதலிடத்தைப் பிடிப்பதையெல்லாம் விட, குறைந்தபட்சம் 2-வது இடத்தையாவது பெறுமா என்பதே பெரிய சந்தேகம்தான் என்று விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். மேலும், 2-வது மற்றும் 3-வது இடத்திற்கான போட்டியே திமுக மற்றும் அதிமுக இடையே நிலவுவதாகவும் அவர் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

“இடைத்தேர்தலில் 2-வது இடமாவது திமுகவுக்கு கிடைக்குமா?”.. மாணிக்கம் தாகூர் கிண்டல்!
மாணிக்கம் தாகூர்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 11 Sep 2026 19:26 PM IST

சென்னை, செப்டம்பர் 11: தமிழக அரசியல் களம் இடைத்தேர்தல் நெருங்கும் சூழலில் நாளுக்கு நாள் சுவாரசியமாகவும், சூடான விவாதங்களுடனும் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான கருத்துப் போர்களும், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர், ஆளும் திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகியவற்றின் தேர்தல் வாய்ப்புகள் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

மேலும் படிக்க: இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் தவெக ஆட்சி கவிழும்.. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சூளுரை!

இரண்டாம் இடத்திற்கான போட்டியே நடக்கிறது:

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாணிக்கம் தாகூர், தற்போதைய அரசியல் சூழல் குறித்து வெளிப்படையாகப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, களம் தயாராகி வருகிறது. வரும் தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை” என்று நம்பிக்கையுடன் குறிப்பிட்டார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், “தற்போதைய நிலவரப்படி, தேர்தலில் 2-வது மற்றும் 3-வது இடத்தைப் பிடிப்பதற்காகவே திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே கடும் போட்டி நடந்து கொண்டிருக்கிறது” என்று விமர்சித்தார்.

திமுக மீது கடுமையான தாக்குதல்:

செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த மாணிக்கம் தாகூர், “முதலில் வரவிருக்கும் தேர்தலில் திமுக குறைந்தபட்சம் 2-வது இடத்தையாவது பிடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அப்படி ஒருவேளை அவர்கள் 2-வது இடத்தைப் பெற்றுவிட்டால், அதன்பிறகு மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசலாம்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட திமுக தலைவர்களின் தொடர் கருத்துக்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், வெறும் வாய்வார்த்தை பேச்சுக்களை மட்டுமே வைத்துக்கொண்டு திமுக தலைவர்கள் அரசியல் செய்து வருவதாகவும் சாடினார்.

மேலும் படிக்க: 2 தொகுதி இடைத்தேர்தல்.. திமுக-அதிமுக-தவெக மும்முனை போட்டி.. யார் வசம் செல்கிறது மதுராந்தகம்- தாராபுரம்!

மாறிவரும் கூட்டணிக் கணக்குகளும் கள நிலவரமும்:

சமீபகாலமாக தமிழக அரசியலில் உருவாகியுள்ள புதிய கூட்டணிக் கட்டமைப்பு மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான விவாதங்களின் பின்னணியிலேயே மாணிக்கம் தாகூரின் இந்த விமர்சனம் முக்கியத்துவம் பெறுகிறது. காங்கிரஸ், விசிக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுடன் உருவான புதிய அரசியல் நகர்வுகள், திமுக மற்றும் அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கிகளுக்கு சவாலாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் போன்ற இடைத்தேர்தல் களம் காணும் தொகுதிகளில் பலமுனைப் போட்டி நிலவும் சூழலில், பிரதான திராவிடக் கட்சிகளின் செல்வாக்கு எந்தளவுக்கு உள்ளது என்பதை இந்தத் தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Follow Us