மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்.. சென்னை சென்டிரல் – மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்கம்!
Madurai Meenakshi Amman Temple Consecration | மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் நிலை ஏற்பட உள்ள நிலையில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
சென்னை, செப்டம்பர் 12 : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் (Madurai Meenakshi Amman Temple) கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சென்னையில் (Chennai) இருந்து மதுரைக்கு (Madurai) சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. குபாபிஷேகத்தில் பங்கேற்க ஏராளமான பொதுமக்கள் சென்னையில் இருந்து மதுரையை நோக்கி படையெடுக்க வாய்ப்பு உள்ளதன் காரணமாக, தெற்கு ரயில்வே (Southern Railway) இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது. இந்த நிலையில், சிறப்பு ரயில் இயக்கம் குறித்து தெற்கு ரயில்வே கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கோயில் கும்பாபிஷேகம் – சிறப்பு ரயில்கள் இயக்கம்
மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது. நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் இந்த கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அதிலும் குறிப்பாக பண்டிகை நாட்களின் போது கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் தான், கோயில் கும்பாபிஷேகத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதால் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : செங்கல்பட்டில் 14-ஆவது மாடியிலிருந்து குதித்த மருத்துவ மாணவர்.. நொடியில் பிரிந்த உயர்.. இதற்காகவா இந்த விபரீத முடிவு!




எந்த எந்த நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்?
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து செப்டம்பர் 16, 2026 அன்று மாலை 4.10 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 4.30 மணிக்கு மதுரை சென்டிரல் ரயில் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து செப்டம்பர் 17, 2026 அன்று காலை 3.30 மணிக்கு சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு வந்தடையும்.
இதையும் படிங்க : லண்டனில் மிக உயரமான ஹோட்டலில் தங்கும் முதல்வர் விஜய் – ஒருநாள் வாடகை இவ்வளவா?
மக்களுக்கு பயனடையும் வகையில் தெற்கு ரயில்வே அறிவிப்பு
இந்த சிறப்பு ரயில்கள் மூலம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் பொதுமக்கள் பயடைய உள்ளனர். மதுரையை சேர்ந்த ஏராளமான மக்கள் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் நிலையில், அவர்கள் எந்தவித சிக்கலும் இன்றி பயனிக்க தெற்கு ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.