AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திமுகவின் ஒட்டுண்ணியாக இருந்த காங்கிரஸ்.. பிரதமரை விமர்சிக்க என்ன தகுதி உள்ளது.. நயினார் நாகேந்திரன் நாக்-அவுட் கேள்வி!

Nainar Nagendran Criticizes Congress : தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் விமர்சிப்பதற்கு காங்கிரஸ் கட்சிக்கு என்ன தகுதி உள்ளது என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார் .

திமுகவின் ஒட்டுண்ணியாக இருந்த காங்கிரஸ்.. பிரதமரை விமர்சிக்க என்ன தகுதி உள்ளது.. நயினார் நாகேந்திரன் நாக்-அவுட் கேள்வி!
நயினார் நாகேந்திரன்- மாணிக்கம் தாகூர்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 11 Sep 2026 21:58 PM IST

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசை விமர்சிப்பதற்கு காங்கிரஸ் கட்சிக்கு என்ன தகுதி உள்ளது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தம்பி மாணிக்கம் தாகூர், நேற்று நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மீண்டும் ஆர். எஸ். எஸ். மற்றும் பாஜக மீது அவதூறுகளை அள்ளி வீசி உள்ளீர்கள். தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் விமர்சிக்க காங்கிரசுக்கு என்ன தகுதி உள்ளது. கச்சத்தீவை தாரை பார்த்ததும், காங்கிரஸ்- திமுக ஆட்சி காலத்தில் 600- க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போதும், முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சம் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட போதும், அதே முள்ளிவாய்க்காலில் பள்ளி மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்த போது வாய் மூடி மௌனம் காத்தவர்கள் தான் நீங்கள். கடந்த 2014- ஆம் ஆண்டு பிரதமர் மோடி பொறுப்பேற்ற வின்னர் மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தடுக்கப்பட்டுள்ளன.

சட்டமன்றத்தில் எந்த மதத்தையும் முன்னிறுத்தக் கூடாது

அது மட்டும் இன்றி கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை உடனடியாக ராஜ்ஜிய நடவடிக்கை மூலமாக மீட்டு அவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு தொடர்ந்து உறுதி செய்து வருகிறது. பித்தகைய வெளியூர் துறை செயல்பாட்டை கொச்சைப்படுத்துவது காங்கிரசின் கறை படிந்த வரலாற்று பாவங்களை மறைக்கும் மலிவான நாடகமாகும். மதச்சார்பின்மை பற்றி பேசும் மாணிக்கம் தாகூர், சட்டமன்றத்தின் மாண்பு எந்த மதத்தையும் முன்னிறுத்தாமல் நடுநிலையோடு இயங்குவது தான். ஆனால், சபாநாயகரும், நிதித்துறை அமைச்சரும் தொடர்ந்து பைபிள் வசனங்களை மட்டுமே மேற்கோள் காட்டி சட்டப்பேரவையின் மாண்பை உடைத்து வருகிறார்கள்.

மேலும் படிக்க: Solomon Pappaiah : பேராசியர்.. நடுவர்.. நடிகர்.. சாலமன் பாப்பையா கடந்து வந்த பாதை!

காங்கிரஸ் கட்சிக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது

பைபிளை போல பகவத் கீதையிலும், திருக்குர்ஆனிலும் மனித குலத்திற்கான நற்போதனைகள் உள்ளன. அவற்றை ஏன் மேற்கோள் காட்டுவதில்லை. அவரவர்களுக்கு அவர்களின் மதம் பெரிதாக இருக்கலாம் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், அரசு நிர்வாகம் மற்றும் சட்டமன்றத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே முன்னிறுத்தி, மற்ற மதங்களை புறக்கணிப்பது என்ன மாதிரியான மதச்சார்பின்மை என்று தெரியவில்லை. சட்டப்பேரவையில் அரங்கேறும் ஒரு தலைப்பட்ச மத திருப்திப்படுத்தும் தமிழக வெற்றிக்கழக அரசியலுக்கு ஆதரவாக செயல்படும் உங்களுக்கு நல்லிணக்க பாடம் எடுக்க எந்த தார்மீக உரிமையும் கிடையாது.

திமுகவின் ஒட்டுண்ணி காங்கிரஸ்

புதிய தலைமைச் செயலகம் அமைத்தால் மீனவ மக்களும், மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை சுட்டி காட்டினால் காங்கிரசுக்கு ஏன் இந்த பதற்றம் ஏற்படுகிறது. இவ்வளவு நாள் திமுகவின் ஒட்டுண்ணியாக இருந்துவிட்டு, தவெக பக்கம் சாய்ந்த அடுத்த கனமே அந்த கேரக்டராகவே மாறி விட்டீர்கள் தம்பி மாணிக்கம் தாகூர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: 2 தொகுதி இடைத்தேர்தல்.. திமுக-அதிமுக-தவெக மும்முனை போட்டி.. யார் வசம் செல்கிறது மதுராந்தகம்- தாராபுரம்!

Follow Us