முதல்வர் விஜய்யை விமர்சிக்கக்கூடாது.. ஸ்டாலின் போட்ட கோட்டை தாண்டிய திமுகவினர்.. தடுத்தும் அடங்காத கொந்தளிப்பு!
DMK Members Violated M. K. Stalin Directive : தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜயை விமர்சிப்பது தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. க. ஸ்டாலின் உத்தரவை அவரது கட்சியினர் மீறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்தும், அவர் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்தும், கடந்த கால ஊழல் புகார்கள் குறித்தும், சர்க்காரியா கமிஷன் குறித்தும் கடுமையாக பேசி இருந்தார். இதற்கு, திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு. க. ஸ்டாலின் விளக்கம் அளித்து வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், முதல்வர் விஜயின் பேச்சை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திராவிட முன்னேற்றக் கழகத்தினர் சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பவர்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிக்காமல், மாண்புடன் பேச வேண்டும் என்று மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.
முதல்வர் ஜோசப் விஜய்யை கடுமையாக விமர்சித்த திமுகவினர்
ஆனால், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்களில் திமுக துணை பொது செயலாளரும், எம். பி. யுமான ஆ. ராஜா இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் பி. கே. சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் எம். எல். ஏ., மார்க்கண்டேயன் எம். எல். ஏ., உள்ளிட்டோர் முதல்வர் ஜோசப் விஜய் கடுமையாக விமர்சித்து பேசி இருந்தனர். அதோடு, சட்டத்துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார்யும் மிகவும் இழிவுபடுத்தி ஆ. ராஜா பேசி இருந்தார்.
மேலும் படிக்க: “ஆ.ராசாவின் பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது!”.. சிபிஎம் சண்முகம் கொந்தளிப்பு!!




அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த பதிலடி
இதற்கு அமைச்சர் நிர்மல் குமார் எதிர்வினை ஆற்றி இருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நீங்கள் ( திராவிட முன்னேற்றக் கழகம்) திருந்துவதற்கு வாய்ப்பு கிடையாது. தமிழ்நாடு அரசியலில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் முடிவு உரையே தமிழக மக்கள் விரைவில் எழுதுவார்கள் என்பது மட்டும் நிச்சயம் என்று தெரிவித்திருந்தார். அத்துடன், திமுக துணை பொது செயலாளர்களில் ஒருவரான கனிமொழி எம். பி. சமூக வலைதள பதிவு வெளியிட்டிருந்தார்.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
அதில், “யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி ஆ. ராஜா எம். பி. யின் பேச்சை மறைமுகமாக கண்டித்து இருந்தார். இதே போல, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அமைச்சர் வன்னி அரசு ஆகியோர் ஆ. ராஜாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனிடையே, முதல்வர் விஜய் குறித்த பேச்சுக்கு ஆ. ராஜா வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: “மேடை போட்டு ஆபாசமாக பேசுவதுதான் கடைசி ஆயுதமா?”.. மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி கேள்வி!!