AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இடதுசாரிகளால் எங்களுக்கு ஆபத்தா.. நெவர்! மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை.. தொல்.திருமாவளவன்!

Thol. Thirumavalavan Comments On Left Parties : தமிழக இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடுவதால் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

இடதுசாரிகளால் எங்களுக்கு ஆபத்தா.. நெவர்! மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை.. தொல்.திருமாவளவன்!
திருமாவளவன்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 14 Sep 2026 07:31 AM IST

தமிழக இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்து போட்டியிடுவதால் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணிக்கு பாதிப்பில்லை என்றார் விசிக தலைவர் தொல். திருமாவளவன். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு. க. ஸ்டாலின் அண்மையில் வெளியிட்ட வீடியோவில் மனித மாண்புடன் இருத்தல் வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திராவிட முன்னேற்ற கழக கண்டன போராட்டத்தில் அந்த மாண்பை கட்சியினர் கடைபிடித்ததாக தெரியவில்லை. இது தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிரான கருத்து என்பதை விட திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிரான கருத்தாகவே எடுத்துக் கொள்ள முடியும். நீண்ட, நெடிய அரசியல் பாரம்பரியம் கொண்டவர்கள், பிறருக்கு வழிகாட்டக் கூடியவர்கள் தங்களின் அரசியல் வாழ்க்கைக்கும், அரசியல் நாகரிகத்துக்கும் முன்னோடியாக இருத்தல் வேண்டும். திமுகவில், ஆ. ராசா மற்றும் திமுகவின் முன்னாள் பொறுப்பாளர்கள் ஆகியோரின் பேச்சுகள் அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது.

இடைத்தேர்தலில் தனித்து களம் காணும் இடதுசாரிகள்

தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தெரிவித்து வருகிறது. தற்போதும், அதில் உறுதியாக உள்ளனர். தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடுகிறார்களே தவிர தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ சொல்லி விட முடியாது. இது அந்தந்த கட்சிகளுக்கான சுதந்திரம் ஆகும். அவர்களுக்கான உரிமை ஆகும்.

மேலும் படிக்க: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் – சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

இடதுசாரிகளால் ம.ச.வெ. கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை

இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடுவதன் காரணமாக, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்று திருமாவளவன் தெரிவித்தார். திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியது. அத்துடன், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சரவையில் இடம் பெற்றதுடன், மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி என கூட்டணி அமைத்து அதில் பங்கேற்றுள்ளனர்.

திமுக டூ தவெகவுக்கு சென்ற கட்சிகள்

இதே போல, திமுக கூட்டணியில் அங்கம் வகித்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருவதாகவும், ம.ச.வெ. கூட்டணியில் இடம்பெறவில்லை எனவும், இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாகவும் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தான், இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதால் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணிக்கு பாதிப்பு இல்லை என்று திருமா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: விநாயகர் சதுர்த்தி விடுமுறை முடிந்து ஊர் திரும்ப சிறப்பு பேருந்துகள் – போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு

Follow Us