எடப்பாடியின் மாஸ் மூவ்.. மதுராந்தகம்- தாராபுரத்தை தூக்க இறக்கப்பட்ட Special Squad.. களம் இனி வேற மாதிரி இருக்கும்!
AIADMK Election Campaign Committee : தமிழகத்தில் நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களுக்காக அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் தேர்தல் பணிக்குழுவை அமைத்து கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக, தவெக, நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, அதிமுக சார்பிலும் மதுராந்தகம் தொகுதிக்கு கணித சம்பத், தாராபுரம் தொகுதிக்கு பானுமதி ஆகியோர்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து, இரு தொகுதிகளுக்கும் தேர்தல் பணி குழுவை அமைத்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு விரைவில் நடைபெற உள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் தேர்தல் பணிக்குழு
இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும், தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகவும் மதுராந்தகம் ( 35) சட்டமன்ற தொகுதிக்கு, அதிமுக துணை பொது செயலாளர், முன்னாள் அமைச்சருமான கே. பி. முனுசாமி தலைமையிலும், தாராபுரம் ( 101) சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக பொருளாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமையிலும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
மேலும் படிக்க: இடைத் தேர்தலில் 2 தொகுதிகளிலும் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டி – வீரபாண்டியன் அறிவிப்பு




தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு
அதன்படி, விரைவில் அறிவிக்கப்பட உள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு அதிமுக நிர்வாகிகளும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வரும் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் உள்ளிட்டோர் முழு ஒத்துழைப்பு வழங்கி சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு இரு தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று அதில் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து . . .
தமிழக சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து, அதிமுகவில் சேர்ந்த எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்த திடீர் புயலைத் தொடர்ந்து, 7 தொகுதிகள் காலியானது. இதில், 5 தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படாமல், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்த இரு தொகுதிகளில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆன மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர். இவர்களையே, எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களாக தவெக சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளது தேர்தலுக்கானத்தில் பெரும் ட்விஸ்ட்- ஆக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: தவெக கட்சி கொடி வண்ணத்தில் புதிய பேருந்துகள்… சர்ச்சையாகும் புகைப்படங்கள்